December 1, 2021

நடக்க இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி (வடசென்னை) தங்கபாண்டியன் மகள், தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), க.பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), கருணாநிதியின் மகள் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய 6 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

‘குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்’

இந்நிலையில், திமுகவில் இருப்பது, ‘குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்’ என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையாளரின் பெயர் சிலந்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.