கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 61 தற்கொலைகள் – மோடி அரசு தகவல்!

கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 61 தற்கொலைகள் – மோடி அரசு தகவல்!

ஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக, நாடாளுமன்றதில் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மும்பை ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது? எஸ்.சி., எஸ்.டி., செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் குறித்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறும்போது, “நாடு முழுவதும் இருக்கும் ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎம், என்ஐடி, ஐஐஎஸ்சி என 108 உயர் கல்வி நிறுவனங்களில் 87 இல் எஸ்.சி, எஸ்.டி., செல்கள் இருக்கின்றன. மற்ற நிறுவனங்களில் சம வாய்ப்பு செல், மாணவர் குறைதீர் செல், மாணவர் குறைதீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறைதீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் உள்ளன என்று கூறினார்.

மேலும் கூறும்போது, கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடியில் 33 பேரும், என்ஐடியில் 24 பேரும், ஐஐஎம்–இல் 4 பேர் என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நடந்துள்ளன என்று கூறி உள்ளார்.

அத்துடன், 2009-ல் ராக்கிங்குக்கு எதிராகவும், 2019-ல் மாணவர் குறை தீர்ப்பு குறித்தும், 2023-ல் தேசிய தற்கொலை தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை விடுத்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 -ன்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமநிலை, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியன மூலம் மாணவர்களின் உள வலிமையை அதிகரிக்க வழி சொல்லப்பட்டிருக்கிறது என்றார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், “61 தற்கொலைகள் என்பது, மன அழுத்த சூழல் மத்திய கல்வி நிறுவனங்களில் தொடர்வதையே காட்டுகிறது. இன்னும் 21 நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி செல்கள் இல்லை என்பது, இவ்வளவு தற்கொலைகளில் இருந்தும் இந்த உயர் கல்வி நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரியவருகிறது என தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!