October 18, 2021

நம்மில் எல்லோர் இல்ல திருமணங்களில் வண்ணமும், வாசமும் நிறைந்திருக்கும். பல்வேறு சடங்குகளுக்கும் குறைவிருக்காது.
மணமக்கள் மகிழ்ச்சியாக நீடுழி வாழ வேண்டும் என்பதே அதற்கு அடிப்படை. இதையொட்டி சில திருமண நிகழ்வுகள் நான்கு நாட்கள் வரை நீடிக்கும்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். அத்தனை பேருக்கும் அறுசுவை விருந்து. அதற்கான செலவைச் சத்தமாகச் சொல்லி விட முடியாது. இந்த ஒற்றைத் திருமணத்திற்காக, வாழ்நாள் சேமிப்பைச் செலவிடத் தயங்குவதில்லை பாசமிக்க தந்தையர் பலர். அண்மையில் சினிமா பிரபலம் ஒருவரின் மகளுக்கு இரண்டாம் திருமணம். செலவு எவ்வளவு தெரியுமா? அது சரி.. அது எதற்கு இப்போது? ஆனால் இந்த போக்கால் கவரப்பட்டு அவரது ரசிகர் ஒருவர் தன் மகளுக்கு கடன் வாங்கி இதே பாணியில் மேரேஜ் நடத்த ஆசைப்பட்டு அதற்கு வழியில்லாததால் சூசைட் செய்து கொண்டார் என்றொரு செய்தி சென்னை நாளிதழ்களில் இடம் பெற வில்லை என்பதுதான் சோகம். பெரும்பாலும் இந்த திருமண கோலாகல விழா மோகம் நடுத்தரக் குடும்பங்கள் பலவற்றை கடனில் தள்ளி, அவர்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றி சோகத்தில் மூழ்க வைக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம் கடந்த மாதம் ஒரு யூ டியூப் சேனல் நம் சென்னை இளைஞர், இளைஞிகளிடையே எடுத்த ஒரு சர்வே-யில் இது போன்ற ஆடம்பர் திருமணம் வேண்டம் என்று சொன்னோரே அதிகம்.. அந்த ஒரு நாள் கூத்துக்கு அதிகச் செலவு வேண்டாம் என்பதை வலியுறுத்தி கூடவே இயற்கை விவசாயம், குடும்ப உறுப்பினர்களின் வாழ்வியல் நிலைமை உள்ளிட மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்படும் சில பல உண்மைகளை சுட்டிக்காட்டும் படம்தான் சேரனின் ‘திருமணம்’