இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும். காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் ‘காத்து வாக்குல ஒரு காதல்’.
சீரடி சாய்பாபா வழங்கும் எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும் தெறி வில்லன் சாய்தீனா ,கல்லூரி வினோத் ,ஆதித்யா கதிர் ,லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.குமரன் படங்களின் படத்தொகுப்பாளர். இசை ஜுபின் .இவர் பழைய ‘வண்ணாரப் பேட்டை’, ‘விண்மீன்கள்’ படங்களின் இசையமைப்பாளர் . பப்ளிசிட்டி டிசைன் ரெட் லைன்.
படம் பற்றி இயக்குநர் மாஸ் ரவி கூறும் போது ,” படம் பார்த்து விட்டு இப்படி ஒரு காதலி கிடைக்க வில்லையே என ஆண்களும் இப்படி ஒரு காதலன் கிடைக்கவில்லையே என பெண்களும் ஏங்கும் அளவுக்கான காதல் கதை. காதலின் மகத்துவம் கூறும் இந்தப் படத்தின் டீஸரை காதலர் தினத்தில் வெளியிட்டோம். டீஸர் வெகுஜன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள் .நடிகர் யோகிபாபு, இயக்குநர்கள் சுப்ரமணிய சிவா ,விஜய்சந்தர் ஆகியோர் பாராட்டியதை மறக்க முடியாது.” என்கிறார்.
படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
“அடுத்தடுத்து வரும் படங்களில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஹீரோ என்று வந்திருக்கும்…
டைரக்டர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.…
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்…
இரண்டு நாட்கள் முன் வரை எம்பியாக இருந்த ராகுல் காந்தி, தற்போது தனது அந்த பதவியை இழந்து நிற்கிறார். அவரது…
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த…
நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' என பெயரிடப்பட்டு,…
This website uses cookies.