இந்தியாவில் 2 வயதுக்குட்பட்ட 6.4% குழந்தைகளுக்கு உணவு பற்றக்குறை!
வன அழிப்பு காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கார்பன் டை ஆக்ஸைடு எனப்படும் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. வன அழிப்பு காரணமாக, இந்தியாவில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.வெப்பம் அதிகரிப்பால் உலகம் முழுவதும் 94 கோடி விவசாயிகள் பாதிப்பை சந்திப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரித்தால் அரிசி, கோதுமை மற்றும் தானியங்களை விளைவிக்க முடியாது. இதனால் உணவு பற்றாக்குறை, பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அண்மையில் கூட ஒரு தகவல் வெளியான நிலையில் நம் இந்தியாவில் 2 வயதுக்குட்பட்ட 6.4% குழந்தைகள் உணவு பற்றக்குறையுடன் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமி பருவநிலை மாற்ற பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி போராடி வருகிறார். ‘‘பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பேராபத்தில் இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சி, பணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்…’’ என ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் உலக தலைவர் கள் மத்தியில் சிறுமி கிரேட்டா பேசியது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.அழகான பூமியை நாசப்படுத்தி விட்டு, பணத்தை மட்டும் வைத்து மனிதகுலம் என்ன செய்து விடமுடியும்? சிறுமி கிரேட்டாவை போல சுற்றுச்சூழலை காக்க இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதற்கான காரணம் விரிவான தேசிய ஊட்டசத்து கணக்கெடுப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கூட தெரியவந்துள்ளது. இந்திய அளவில் உணவின்றி தவிக்கும் 6.4% குழந்தைகள் இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு உணவளிக்கும் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே அங்கு தான் குறைந்தபட்சமாக 1.3% குழந்தைகள் உணவு பற்றாக்குறை யுடன் உள்ளனர். அதேசமயம் அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்தில் 35.9% குழந்தைகள் போதிய உணவில்லாமல் இருக்கின்றனர்
இந்த வரிசையில் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 2.2% குழந்தைகளும், குஜராத், தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 3.6% குழந்தைகளும் உணவுப் பற்றாக்குறை யுடன் உள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 4.2% குழந்தைகள் போதிய உணவில்லாத நிலையில் வாழ்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்ச உணவுப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களின் வரிசையில் கேரளா 32.6 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது
இதுதவிர மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வில், இந்திடியாவில் 5 வயதுக்குட்பட்ட 35% குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17% குழந்தைகள் வளர்ச்சிக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும், 33% குழந்தைகள் வயதுக்கேற்ற எடையின்றி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது