6 குழந்தைகளை கருணை கொலை செய்ய அரசிடம் அனுமதி கோரும் ஆக்ரா பெற்றோர்!

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன. இந்த வாயுக்கள் நிலை மாறும் போதுதான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு. இதில் குழந்தையின் வயிற்றில் அஜீரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும்.
Hand The Sleeping Baby In The Hand Of Mother
அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் சீற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும்.

விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும்,நவீன உலகில் நரம்புத் தளர்ச்சி’என்ரு பெயரிட்டுள்ளனர்.

அறிகுறிகள்

▪குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.

▪மலச்சிக்கல் உருவாகும்.

▪3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர்.

இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும்.

குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான்.

அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது.

ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.

பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும்.
mercy kill
இந்நிலையில் ஆக்ராவை சேர்ந்தவர் மொகமத் நசீர் (வயது 42) அங்குள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையிலும் உணவை உண்ண முடியாத நிலையிலும் பலவீனமாக உள்ளனர். குழந்தைகள் 6 வயது முதல் 18 வயது வரை உள்ளனர். நசீர் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவி செய்ய பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

6 குழந்தைகளுக்கு தந்தையான நசீர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது,”நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கபட்டு எனது குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். எனது வருமானத்தால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனது குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாகதான் பிறந்தார்கள். 2 வருடம் அனைத்து குழ்ந்தைகளை போலும் சாதரணமாகத்தான் இருந்தார்கள்.4 அல்லது 5வயதில் அவர்களுக்கு உடலநிலையில் சரி இல்லாமல் போனது அதில் இருந்து அவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக மாறினார்கள் அவர்களால் எழுந்து நடக்க கூட முடியவில்லை.நான் குழந்தைகளை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.அல்லது பிரதமர் மோடி மருத்துவ உதவி செய்யவேண்டும்”என்றார்.

குழந்தைகளின் தாயார் தமசுமிடம் கேட்ட போது,”எங்களுக்கு பொருளாதார நிலை இல்லை. அதனால் தான் நாங்கள் கருணை கொலை செய்ய அனுமதி கேட்கிறோம். அவர்களால் தங்கள் உணவை எடுத்து தங்களால் உண்ண முடியவில்லை. எங்களால் குடும்பத்தை கவனிக்கவே பெரிய பாடாக உள்ளது இதில் அவர்களின் சிகிச்சைக்கும் எங்களால் செலவிட முடியவில்லை”என்றார்