March 22, 2023

இருபது வருடங்களுக்கு முன், அத்தையின் காதல் திருமணத்தால் உடைந்து சிதறுகிறது குடும்பம். அதை பாசம் எனும் பசையால் மீண்டும் ஒட்டவைக்க முயலும் மருமகனின் பயணமே, `வந்தா ராஜாவாதான் வருவேன்’. அக்கட தேசத்தில் அதிரடி ஹிட் அடித்த `அத்தரிண்டிகி தாரேதி’ படத்தின் ரீமேக். அந்தக் கதையை ஏற்கெனவே, குடோனில் இருந்த பருத்திமூட்டையைத் தென்னந்தோப்புக்கு மாற்றுவதுபோல், `ஆம்பள’ படத்தை இயக்கினார் சுந்தர்.சி இப்போது தென்னந்தோப்பில் இருக்கும் பருத்திமூட்டையை மீண்டும் குடோனுக்கு மாற்றுவதுபோல் `வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.