சர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ? அரசு அனுமதி கோருகிறது!

சர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு ? அரசு அனுமதி கோருகிறது!

தமிழகத்தில்  சர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்தப் பொருளும் வேண்டாம் எனப் பெறப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை மாற்றியமைக்க கோரி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தை பொருத்த வரை, அரிசியுடன் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் பி.எச்.எச்., பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய். என்.பி.எச்.எச். அட்டைகளும், அரிசி இல்லாமல் சர்க்கரை உள்ளிட்ட பிற பொருட்கள் வழங்கப்படும் என்.பி.எச்.எச்.எஸ் அட்டையும், எந்தப் பொருள் வேண்டாம் எனும் என்.பி.எச்.எச்.-என்.சி. அட்டையும் உள்ளது.

இதில், சர்க்கரை அட்டை எனக் கூறப்படும் என்.பி.எச்.எச்.-எஸ். ரேஷன் அட்டைத்தாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 இந்த வகை அட்டைதாரர்களில், கடந்த 9-ம் தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரேஷன் அட்டைத்தாரர்கள் 1000 ரூபாய் பொங்கல் பரிசு பெற்று விட்டதால், மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ள தாகவும், பொருளாதாராத்தில் பின்தங்கியவர்கள் என்ற முறையில் அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கும் வகையில், தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!