November 28, 2021

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முழு விபரம்!

இந்தியா முழுவதும் புதிதாக 6 எய்ம்ஸ் கிளைகளை உருவாக்குவதற்காக 2012ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் போபால், ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வர்,  சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், ராஜஸ்தானின் ஜோத்பூர், பீகாரின் பாட்னா மற்றும் ரிஷிகேஷ் என ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளைகள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக,தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆகிய 4 மாநிலங் களில் மேலும் 4 எய்ம்ஸ் கிளைகளை தொடங்க உள்ளதாக, கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் அறிவித்தது. அதன் படி, மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன் முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப் பட்டது, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தான். அந்த சிகிச்சையை செய்தவர் டாக்டர் வேணுகோபால் என்ற தமிழர். இதுபோல, ஸ்டெம் செல் தெரபி மற்றும் சிறுநீரக துறை சிகிச்சையில் உலக அளவில் முன்னோடி மருத்துவமனையாக எய்ம்ஸ் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் செயற்கை குழாய் குழந்தை வசதி அறிமுகமான முதல் அரசு மருத்துவமனையும் எய்ம்ஸ் தான். 2008ம் ஆண்டில் இந்த வசதி அறிமுகமானது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஎன்ஏ பரிசோதனை கூடம் உள்ளிட்ட வசதிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உண்டு.

கடந்த 2012ம் ஆண்டில் 330 ஏக்கர் பரப்பளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் உறுப்பு மாற்று, இருதய பிரிவு உட்பட 50க்கும் மேற் பட்ட துறைகளில் சூப்பர் ஸ்பெஷாலிடி வசதியை கொண்டது, எய்ம்ஸ் மருத்துவ மனை யாகும். சாமானியனும், பெரும் பணக்காரர்களும் சிகிச்சை பெறக்கூ டிய வகையில் இலவச சிகிச்சையும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

 ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், தனியார் மருத்துவமனையைப் போல வசதியாக அமர்ந்து சிகிச்சை பெற ஆயிரத்து 700 ரூபாய், ஆயிரத்து ,100 ரூபாய் கட்டண அடிப்படையில் ‘ஏ’ கிளாஸ், ‘பி’ கிளாஸ் வார்டுகள் தனியாக இருக்கின்றன.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் இதய சிகிச்சை பெறுகின்றனர். 4 ஆயிரத்து 600 பேர் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

1984ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவ மனையில் தான் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே நேரத்தில், எய்ம்ஸில் காலியாக இருக்கும் படுக்கைகள் அடிப்படை யிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர்.

இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு பணிபுரிய செல்லக் கூடாது. இவர்களுக்கான வீடுகள் மருத்துவமனை வளாகத்திலேயே அனைத்து கொடுக்கப் படும். தமிழகத்துக்கு எய்ம்ஸ் வருவதால், கூடுதலாக எம்பிபிஎஸ் சீட்டுகளும், ஸ்பெஷா லிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு சீட்டுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஆண்டுதோறும் ஆயிரத்து 96 கோடி ரூபாய் பணம் செலவழிக்கிறது.

இப்பேர்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க மதுரை அருகே தோப்பூரில் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. 1,500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாகவும், இதற்கான நிலம், மின்சாரம், நான்கு வழிச்சாலை, குடிநீர் உள்ளட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுவர பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

அதனையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியானது. மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற தகவலில் இந்த விவரம் தெரியவந்தது.

அதே சமயம் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சசர் விஜயபாஸ்கர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்த தடையும் இல்லை என்று கூறியிருந்தார். மருத்துவ மனை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறியிருந்த அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதை விசாரித்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என அறிக்கை அளிக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,258 கோடியில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சரவை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்து உள்ளார். அதேபோல், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆக, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதும், அது எந்த இடத்தில் என்பது உறுதி செய்யப்படாமலே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீண்டது. தமிழக அரசு, எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளை கடந்து நீடித்து வந்த இந்த விவகாரம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தற்போது முற்று பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க்து.