December 2, 2021

அதே டைப்பிலான புத்தம் புதிய டைட்டானிக் 2 எப்போ பயணத்தை ஆரம்பிக்கும் தெரியுமா?

பெரியவரோ, இளைஞரோ, சிறுவரோ யாராலும் மறக்க முடியாத பெயர் ‘டைட்டானிக்’, ஏதோ ஒரு காரணி மூலம் பலரின் மனசை விட்டலகாத இந்த கப்பலின் தற்போது அதே பழைய உருவத்தை போன்றே உருவாக்கப்பட்ட டைட்டானிக்-2 கப்பல் தனது பயணத்தை எப்போது தொடங்கும் என்று உலகமெங்கும் எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், 2022-ல் அந்தப் பிரம்மாண்ட கப்பல் இயங்கத் தொடங்கும் என்று அறிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய நிறுவனமான ப்ளூ ஸ்டார் லைன்.

இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு கடந்த 1915-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி டைட்டானிக் கப்பல் புறப்பட்டது. ஆனால், கப்பல் புறப்பட்ட 5 நாட்களில் ஏப்ரல் 15-ம் தேதி அட்லாண்டிக் கடற்பகுதியில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக பனிமலையில் மோதி கப்பல் மூழ்கியது. இந்தக் கப்பலில் பயணித்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளில் 1500 பேர் இறந்து விட்டார்கள்.கடல் பகுதியில் நிகழ்ந்த விபத்துகளிலே இந்த விபத்து தான் மிகவும் கோரமான ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

இந்த கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் டைட்டானிக் உலக அளவில் வசூலை வாரிக் குவித்தது.இன்று அது திரையிடப்பட்டாலும் அதை காண்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இந்நிலையில் கடலில் மூழ்கிய டைட்டானிக்-1 கப்பலைக் போன்று டைட்டானிக்-2 கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒன்பது அடுக்குகள், 835 கேபின்களோடு 2,435 பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இந்தக் கப்பல் தயாராகிவருகிறது. முதல் பயணம்: சவுத்தாம்ப்டன் டு நியூயார்க் தான்!

இதனிடையே டைட்டானிக்-1 கப்பலில் இருந்த அதே தோற்றம், உள்ளரங்கு வடிவமைப்பு, அறை கள், ஓவியங்கள் அனைத்தும் அதே தோற்றத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனால் முதலாவது டைட்டானிக் கப்பலில் பயணிக்கும் போன்ற அதே அனுபவம் டைட்டானிக்-2வில் நிச்சயம் இருக்கும்.ஆனால் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள்,தற்காலத்திற்கு ஏற்றாற்போல் அதிகமாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்து உள்ளார்