December 1, 2022

சி பி எஸ் சி என்னும் 55 வயசு டம்மி எஜுகேஷன்!

இன்று சன்டே என்பதால் மேல் மாடிக்கு லீவு விட்டு தத்துபித்து…..இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது ” சி பி எஸ் சி என்னும் 55 வயசு டம்மி எஜுகேஷன்!” ஆ வூனா நம்ம மக்கள் நம்ம எஜுகேஷனை பத்தி தப்பா பேசுவதே பழக்கம், இதுல சில பேர் ஸ்டேட் போர்டா, தமிழ் ஃபர்ஸ்ட் சப்ஜெக்டா இல்லை செகன்ட் சப்ஜெக்டா நீ கண்டிப்பாப கஷ்டப்படுவேன்னு வெறுபேத்தி கொஞ்சமும் வெக்கமே இல்லாம சிபிஎஸீ என்னும் எஜுகேஷனை தத்து எடுத்து தன் பிள்ளைகளை டார்ச்சர் கொடுத்தார்கள், ஆனால் கடைசியில் இவர்கள் ஸ்டேட் போர்ட்டில் படித்த மக்களின் வர்சையில் வெக்கமே இல்லாமல் நின்று எஞ்சினியரிங் அல்லது டாக்டர் படிப்பு என இவர்கள் அவர்களோடு சேர்ந்து படிக்கும் போது நிறைய பேர் அவர்களை பார்த்து கேட்பது ஒன்றுதான் ….. இப்ப நம்ம ரெண்டு பேரும் ஒரே படிப்பு ஒரே சிலபஸ் தானே இதுக்கா இவ்வளவு கஷ்டபட்டு சிபிஎஸ்சி படிச்சேன்னு….!

ஆனாலும் மீசை மண் ஒட்டாத இவர்களின் பதில் என்ன தெரியுமா,,,,,உன்னோட நான் நப்ப படிச்சு மாஸ்டர் முடிச்சு டாக்டரேட் பண்ணுவேன் இதுக்கெல்லாம் ஆணி வேர் சிபிஎஸ்சி தான்னு சொல்லுவாங்க……….. இப்ப கேக்கவே வேணாம்….. பார்த்தியா இந்தியாவே எங்க சிபிஎஸ்ஸியை தான் என்ட்ரன்ஸ் எக்ஸாமினராக வச்சிருக்கு இதுல படிச்ச நாங்க ஈஸியா பண்ணிருவோம்னு சொல்லி வெறுப்பேத்தின பல சிபிஎஸ்சி மாணவ மாணவிகள் பாஸ் இல்லை அப்படியே பாஸ் பண்ணீன பல பேர் ஆயிரக்கணக்கில் பின்னாடி ரேங்க் என சொதப்பினார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் இவர்களுக்கு தனியா தனியா கொஸ்டின் பேப்பரை போங்கா செட் செய்து அதில் சில நல்ல படிச்ச ஸ்டேட் போர்ட் மாணவர்களை தமிழ் மொழிக்கு என ஸ்பெஷல் சாதாவாக கொஸ்டீன் செய்து மூழ்கடித்து அதிலும் இப்ப தெரியுதா சிபிஎஸ்ஸி அருமைனு கேள்வி கேட்ட அத்த பேருக்கும் ஒரே கேள்வி………

1962ஆம் பிறந்த சிபிஎஸ்ஸி என்னும் கல்வியில் படித்த ஒத்த மாணவராவது இது வரை உலகின் அதிக மதிப்பான நோபல் பரிசு பெற்றதுன்டா?

சர் சிவி ராமன் முதல், அமர்த்தியா சென் வரை அல்லது அப்தூல் கலாம் முதல் உலகத்திலே முதன் முதலாய் வான்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் சர்மா வரை படித்தது அரசு பள்ளியில் மற்றும் தன் தாய் மொழியை மெயின் சப்ஜக்ட்டை எடுத்து கொண்டதனால் தான் இதில் இன்னொரு விஷயம் ராகேஷ் சர்மா வின்வெளியில் போய் சுற்றினாலும் அவரை கொண்டு சேர்த்த பெருமை நாசாவுக்கு அல்ல ரஷிய வின்வெளி தான் ஆனாலும் அவர் செலக்ட் செய்த பிறகும் அவருக்கு இந்த வாய்ப்பு கிட்டபடவில்லை…. அவரை ரஷியாவுக்கு வர வைத்து 6 மாதம் ரஷிய மொழியை பயிற்றுவித்த பிறகுதான் அவருக்கும் அந்த முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தாய் மொழி கல்வி தான் அக சிறந்த புரிந்தணர்வு படிப்பில் 100% ரிஸல்ட் தரும் படிப்பு. அந்த மாதிரி படிப்பை நமக்கு தருவது அரசு பள்ளிகள் மட்டும் தான் அதை விட்டு சிபிஎஸ்ஸியில் படிக்க ஆசைபட்டு தாய் மொழியா அப்படினா என்னான்னு, ஆங்கிலம், ஹிந்தி, பிரஞ்சு, சான்ஸ்கிரிட்னு தயிர் சாதத்துக்கு ஜாம் வச்சி போலியா சாப்பிட்டு அப்புறம் அதையே பெருமை பேசும் ஆட்கள் இருக்கும் வரை இவர்களுக்கு இந்த அருமை தெரியப்போவதில்லை……அதனால் சிபிஎஸ்ஸி ஒன்றூம் பெருமையான மேட்டரே இல்லை அது ஒரு அங்கமே அதை அணியாமல் இருந்தால் மானம் ஒன்று கெட்டுபோகாது என்பதே உண்மை……..அருமையான ஞாயிறு உரித்தாகட்டும்…..