December 7, 2021

கனடா பாதுகாப்பு அமைச்சரானார் -இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த்!

னடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா பார்லிமென்டிற்கு கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான ஓட்டுகள் பெற்று வெற்றிப்பெற்றது. இதனையடுத்து 3வது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 54) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்த சேர்ந்தவர்.

லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த், 14,511 ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்திருந்தார். மேலும் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் என்னும் ஒரே பெண்மணியே கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.