பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ்: ரபேல் நடால் பதினோராம் முறை சாம்பியன்

பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ்: ரபேல் நடால் பதினோராம் முறை சாம்பியன்

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீமை வீழ்த்தி, ரஃபேல் நடால் 11-வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. இதில் நேற்றிரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் ‘நம்பர் 1’ வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 8வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகியோர் விளையாடினர்.

இதில் அபாரமாக விளையாடிய நடால், 6–4, 6–3, 6–2 என்ற நேர் செட்களில் தியம்மை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரெஞ்ச் ஓபனில் நடால் வெல்லும் 11வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2005–2008, 2010–2014, 2017ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

மேலும், நடாலின் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோப்பையுடன், ரூ.17.5 கோடி பரிசுத்தொகையையும் நடால் வென்றார்.

error: Content is protected !!