கர்நாடக சி.எம். எடியூரப்பா ரிசைன் பண்ணிட்டார்! ஏன் தெரியுமா?

கர்நாடக சி.எம். எடியூரப்பா ரிசைன் பண்ணிட்டார்! ஏன் தெரியுமா?

தென்னிந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா அடுத்தடுத்து நடந்த அரசியல் சூழலில் தோல்வி பயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கர்நாடகாவில் ஆட்சி கட்டிலில் பாஜகவின் எடியூரப்பா அமர்ந்தது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியது. கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 எம்எல்ஏக் களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் பால் அழைத்து எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமானம் செய்து வைத்தார். அதே சமயம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருந்தும், ஆளுநர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

இந்நிலையில், , எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்கவைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 19-ம் தேதிஇன்று மாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சட்டப்பேரவையில் நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை சரியாக 4 மணிக்கு தொடங்க இருந்தது. அந்நிலையில், இன்று மாலை 3.15 மணியளவில் எடியூரப்பா சட்டசபையில் உரையாற்றத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் மிகவும் உருக்கமாக பேசினார்.

அப்போது பேசிய அவர், “கர்நாடக மக்களுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் எங்களுக்கு மக்கள் நல்ல தீர்ப்பளித்தார்கள். அதனால்தான் நாங்கள் 104 இடங்களில் வெற்றி பெற்றுள் ளோம். காங்கிரஸ் கட்சிக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் மக்கள் அந்தத் தீர்ப்பை அளிக்க வில்லை. காங்கிரஸ் கட்சியையும், ஜேடிஎஸ் கட்சியையும் மக்கள் ஆதரிக்கவில்லை, அவர்களை நிராகரித்துவிட்டனர். அதனால், தான் அவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. தேர்தலுக்குப் பின் இரு கட்சிகளும் சேர்ந்து நேர்மையற்ற முறையில் கூட்டணி அமைத்துவிட்டனர்.

பாஜக 104 எம்எல்ஏக்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்ததால்தான் எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படிதான் எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகியும், என் மாநில மக்களுக்கு நீர்ப்பாசனத் திட்டத்தை முழுமையாகச் செயல் படுத்த முடியவில்லை, என் மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் இல்லை. மாநிலத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்த நிர்வாக முறை மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடனில் ரூ.ஒருலட்சம் வரை தள்ளுபடி செய்ய திட்டமிட்டு இருந்தேன். நீர்ப்பாசனத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டு இருந்தேன். விவசாயிகளை முன்னேற்றுவதுதான் எனது நோக்கமாகும். என் வாழ்க்கையை விவசாயிகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் விவசாயிகளுக்காகவும், மாநில மக்களுக்காகவும் நான் உழைப்பேன்.

கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அப்போது மக்களைச் சந்தித்த போது அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்து வருவதை அவர்களின் முகத்தில் காண முடிந்தது. அதேசமயம், மக்கள் எனக்கு அளித்த வரவேற்பையும் அன்பையும் என்னால் மறக்க முடியாது.

எனக்கு மக்கள் தேர்தலில் 104 இடங்கள் அளித்ததற்குப் பதிலாக மக்கள் 113 இடங்களில் வெற்ற பெற வைத்து இருந்தால், இந்த மாநிலத்தை நான் சொர்க்கமாக மாற்றி இருப்பேன். நான் பதவியை இழக்கிறேன், வேறு எதையும் நான் இழக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை இந்த மாநில மக்களுக்கானது. இந்த மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 28 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும். நான் மக்களிடம் செல்கிறேன், அவர்களிடம் ஆதரவு கேட்கிறேன். நான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதில்லை. நான் ஆளுநர் மாளிகைக்கு சென்று எனது ராஜினாமா கடிதத்தை அளிக்கப்போகிறேன்” என்று தெரிவித்து விட்டு சொன்னபடி கவர்னரிடம் ரிசைன் லட்டரை கொடுத்துட்டார்.

அடிசினல் ரிப்போர்ட்:

அதிரடியாக முதல்வராகி கவர்னர் கொடுத்த 15 நாட்கள் இருக்கிறது. சகல வழிகழிகளிலும் போய் காங்கிரஸ், மஜத கூட்டணி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை அமைப்போம் என்ற கனவில் இருந்த பாஜகவிற்கு இது பேரதிர்ச்சிதான். இத்தனைக்கும் நேற்று தீர்ப்பு வெளியான பின்பு எம்.எல்.ஏக்களிடம் பாஜக தரப்பு குதிரை பேரம் பேச முயன்றனர் என செய்திகள் வெளியானது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரிடம் எடியூரப்பா பேசியதாக வெளியான ஆடியோ என செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது.

ஆனால், காங்கிரஸ்-மஜத தரப்பு தங்கள் எம்.எல்.ஏக்களை தங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் பாஜகவால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதை, ராஜினாமா செய்வதற்கு முன்பு சட்டசபையில் வெளிப்படையாகவே எடியூரப்பா தெரிவித்தார். எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க போதுமான ஆதரவு இல்லாத நிலையில், ராஜினாமா செய்வதே சரியென்ற முடிவிற்கு பாஜக தலைமை முடிவெடுத்ததாக தெரிகிறது. இது எடியூரப்பாவிற்கும் தெரிவிக்கப்பட்டது. எனவேதான், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துவிட்டு, சட்டசபையில் உருக்கமாக உரை நிகழ்த்திவிட்டு, தான் ராஜினாமா செய்கிறேன் என அறிவித்து விட்டு எடியூரப்பா சென்றுவிட்டார் என்று தெரிய வந்துள்ளது

Related Posts

error: Content is protected !!