சர்வேதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகமாக பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மொபைலில் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறி கொள்வதில் இந்தியர்களே அதிக அளவு நேரத்தை செலவிடுகிறார்கள் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. கடந்த 2017 ம் ஆண்டில் இந்தியர்கள் 98% மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும் 2% ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமும் தகவல்களை பரிமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டதில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

இந்தியர்கள் சுமார் 89% மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11% கணினியிலும் வாட்ஸ் அப்களை பயன்படுத்தி தகவல்களை பரிமாறி கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் 87% இந்தோனேஷியாவும், 80% மெக்சிகோவிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டுகிறது.மேலும் அர்ஜென்டினா,மலேசியா, மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் வாட்ஸ் அப் பயன்பாடு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலை தளங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அந்த ஆய்வில் கூறியுள்ளதாவது

சமூக வலை தளங்களில் நேரத்தை செலவிடுபவர்கள் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். வலை தளங்களில் பதிவிடும் மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளச் செய்கிறது. இறுதியில் சில நபர்களை சமூகத்திற்கு விரோதமாகவும் செயல்பட வைக்கிறது.

ஒரு பத்து நிமிடங்களை முகநுாலில் தங்களது நேரத்தை செலவிடுபவர்கள் அதில் பதிவிடப்படும் செய்திகளை கண்டு ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

நேரடியாக பேசி பழகுவது உறவினர்களுடன் நண்பர்களுடன் பேசுவது ஆகியவற்றை விட சமூக வலை தளங்களில் நேரத்தை செலவிடுவது நல்லது என்று அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டனர்.

இதில் கூகுளின் மூலமாகவே வாடகைக்கு புக் செய்வது, அனைத்து விதமான பொருட்களையும் வாங்குவது என அனைத்து சாதாரண சமூக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடருகிறது.

விடுமுறையை கழிக்க கூகுளில் வரும் டாப் 10 ஹோட்டல்களை நம்பி அங்கு செல்கின்றனர். உண்மையில் அது நாலாந்தர ஹோட்டல்களாகவும் இருக்கலாம் ஆனால் அதற்கான கமிஷனையும் கூகுளின் இடைத்தரகர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

நாம் தரத்தை பலி கொடுத்து இணையதளங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். நமக்கு தேவையில்லை என்றாலும் ,அவை நமது மூளையை சேதப்படுத்தினாலும் நாம் இணையதளங்களையே நம்பி இருக்கிறோம். அதனுடன் நாம் ஏதோ வகையில் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஒரு வகையில் இந்த அடிமைத்தனத்திலிருந்து மீள இணையதளத்தையும் சமூக வலை தளங்களையும் பயன்படுத்தி நண்பா்களையும் ஒரு இடத்திற்கு வரவழைத்து மனம் விட்டு பேசலாம். அடிக்கடி இது போன்ற கூடுதல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றை நடத்தலாம்.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!