September 21, 2021

”500 கிலோ எடையுள்ள பெண் இமான் அகமது”: வெயிட்டைக் குறைக்க இந்தியா வந்துட்டார்

எகிப்து நாட்டைச் சேர்ந்த 36 வயதான பெண் வினோத நோயினால், உடல் எடை அதிகரித்து, கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் படுக்கையிலேயே இருக்கிறார். இவரின் எடை 500 கிலோவாக இருப்பதால், உலகின் மிக குண்டானபெண்ணாக கருதப்படுகிறார். எகிப்தில் உள்ள அலெக்சான்ட்ரியா நகரைச் சேர்ந்தவர் எமான் அகமது அப்துலாடி(வயது36). இந்த பெண்தான் வினோத நோயினால் உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டு வருகிறார். பிறக்கும் போதை 5 கிலோ எடையில் இமாம் அகமது அப்துலாடி பிறந்தார், அதன்பின், தனது 11 வயதில் கடுமையாக உடல் எடை அதிகரித்து மற்ற குழந்தைகள் ஓடி, நடக்க முடியாமல் தவழத் தொடங்கினார். யானைக்கால் நோயும் சேர்ந்து கொண்டதையடுத்து இம்மாம் அகமதுவின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது.

woman feb 11

இவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், ” அப்துலாடியின் உடலில் நீரை அதிகமாக இழுக்கும் சுரப்பிகள் இருப்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் எடை அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக வௌியில் எங்கும் நடமாட முடியாமல், கட்டிலில் படுத்த படுக்கையாக அப்துலாடி இருக்கிறார். இவரின் அன்றாட பணிகள், சாப்பாடு, உடைகளை மாற்றுவது, சுத்தம் செய்வது அனைத்தையும் தாயும், சகோதரி சாயாமா அப்துலாடி ஆகியோரும் செய்து வருகின்றனர்.

எமான் தனக்கு சிகிச்சை அளிக்க உலகில் உள்ள பல டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் யாரும் முன்வரவில்லை. இந்தநிலையில் எமானுக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்ய முன்வந்தார். இதையடுத்து பல்வேறு தடைகளை தாண்டி எமான் இன்று (சனிக்கிழமை) மும்பை கொண்டு வரப்பட்டார். அவர் எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா போர்க் எல் அரப் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்டு இன்று மும்பை வந்தடைந்தார். எமானுக்காக அவர் வரும் விமானத்தின் வாசல் உள்ளிட்ட பகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தனது தங்கையுடன் வந்துள்ள. அவருக்கு விரைவில் எடைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளது. மேலும், தைராய்டு மற்றும் இதய கோளாறுகளின் பாதிப்பு உள்ளதால் எமான் சிகிச்சைக்காக குறைந்தது ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.