April 2, 2023

பிலிப்பைன்ஸில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று 5.7 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடு, பசிபிக் எரிமலைப் பகுதியில் (Pasicific Ring of Fire) அமைந்துள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி நிலஅதிர்வு ஏற்படுகிறது. அந்நாட்டு நிலவரப்படி இன்று அதிகாலை 5.41 மணிக்கு பிலிப்பைன்ஸின் தாவோ ஓரியண்டல் மாகாணத்தின் தர்கோனா நகரத்தில் இருந்து தென்கிழக்கே 136 கிலோமீட்டர் தொலைவில் 96 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.2 என அறிவித்தது. பின்னர், 5.7 ஆகக் குறைந்தது. இந்த நிலஅதிர்வு மிண்டனாவ் தீவில் அருகே உள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டது. டெக்டோனிக் நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆனால், சேத்தை ஏற்படுத்தாது என நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.