March 23, 2023

கொரோனாவால் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை!- உலக வங்கித் தகவல்

ன்னமும் முழுமையாக தீராத கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020-ல் மட்டும் உலகளவில் 7.1 கோடி பேர் மிக வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டனர். உலக வங்கி தெரிவித்துள்ள தகவலில் மேலும் இதில், 79 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, கொரோனா பேரிடரால் மட்டும் இந்தியாவில் 5.6 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

அத்துடன் சர்வதேச தீவிர வறுமை விகிதம் கடந்த2019-ல் 8.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில் 2020-ல் அது 9.3 சதவீதமாக அதிகரித்தது. அதன்படி, 2020-ல் 7.1 கோடிபேர் தீவிர வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டதை அடுத்து உலக அளவில் உள்ள மொத்த ஏழை மக்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்தது.

சர்வதேச அளவில் வறுமையின் அதிகரிப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பங்கே மிகப்பெரிய அளவில் இருந்தது. இருப்பினும், சீனா விஷயத்தில் இந்த கருத்து எதிர்மறையாகவே இருந்தது. ஏனெனில், சீனா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வறுமையின் அதிகரிப்பில் அந்த நாட்டின் பங்கு சிறிய அளவுக்கே இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்ய போர், சீன வளர்ச்சியில் மந்தநிலை, உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு ஆகியவை உலக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் 2022-ல் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மேலும் தடைபடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.