September 29, 2021

கலகலப்பு 2 – விமர்சனம் – ஜஸ்ட் டைம் பாஸ்!

சினிமா-வில் குறிப்பாக நம் தமிழ் சினிமாவில் கறுப்பு வெள்ளை சினிமா, கலர் படம், பாகவதர் கால படம், எம்ஜிஆர், ரஜினி, விஜய் படம் என்று எத்தனையோ வகைகள் உண்டல்லவா? அந்த லிஸ்டில் ‘கலகலப்பு 2’ என்ற பெயரில் வாலண்டிரியாக தன் பெயரை நுழைத்துக் கொண்டு ‘இது சுந்தர் சி படம்’ என்ற கேட்டகிரியை உருவாக்கி உள்ளார். இதில் கீழ் தட்டு ரசிகன் விரும்பும் டபுள் மீனீங் மட்டுமின்றி ட்ரிபீள் மீனிங், கவர்ச்சி டான்ஸ் போன்றவைகள் மட்டுமே உண்டு..அதே சமயம் இப்படத்தின் கதையை கேட்டால் சிரித்து விட்டு நகரும்படி சிக்னல் கொடுத்துள்ளார் இயக்குநர்.

Nikki Galrani, Jai, Catherine Tresa, Jiiva, Shiva in Kalakalappu 2 Movie Release Posters

ஆனாலும் விமர்சனம் என்று வந்து விட்டால் கதையை சொல்லியாக வேண்டுமாமே? நான் கடவுள் படத்தில் அகோரிகளின் கூடாரமாக் காட்டிய காசி இப்போ ரொம்ப அழகாக இருக்கிறது. அங்கு ஒரு ஜீவா-வாகப்பட்ட நாயகன் தன் தங்கச்சிக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நொக்கில் ஒரு அரத பழசான மேன்சனை நடத்திக் கொண்டிருக்கிறான். அதே சமயம் சென்னையில் ஒரு இளைஞன் அம்மாவின் ஆபரேஷன் செலவிற்கு காசில்லாமல், தன்னை தவிக்க விட்ட சாமியார் அப்பாவைக் கொல்லப் போகிறான். அப்போது அவனது அப்பா தனது பூர்வீக சொத்து காசியில் இருப்பதாக சொல்கிறார், அதை மீட்டால் உன் கஷ்டமெல்லாம் தீர்ம் என அறிவுரை சொல்கிறார். அப்பாவின் பேச்சைக் கேட்டு காசிக்குப் போனவன் ஒரு லாட்ஜில் தங்குகிறான். அந்த லாட்ஜை நடத்துபன் தான் இக்கதை சுருக்கத்தின் ஓப்பனிங்கில் சொன்ன “தங்கச்சி கல்யாணம்” இளைஞன்.

இதற்கிடையே ஒரு அரசியல்வாதியின் முக்கியான ஊழல் ரகசியங்களைக் கைப்பற்றிய ஆடிட்டர், ஐந்து கோடி பணம் கேட்டு அரசியல்வாதியை மிரட்டுகிறார். அதன்படி பணத்தைக் கொடுத்துவிட்டு ரகசியத்தை மீட்பதற்காக தனது விசுவாசியான போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை காசிக்கு அனுப்புகிறார் அரசியல்வாதி. போன இடத்தில் போலீஸ் உயரதிகாரிக்கு பண ஆசை வர, ஆடிட்டரை கொன்றுவிட திட்டமிடுகிறார்.

அதனிடையே ஒரு சாமியார் அந்த லாட்ஜை ஆட்டையைப் போட திட்டமிட, இதற்கிடையில் ஒரு திருட்டுக் கும்பல் அமெரிக்க ரிட்டர்ன் என்று பொய் சொல்லி தத்துப் பிள்ளையாய்ப் போய் அங்கிருக்கும் பரம்பரை சொத்தை அபரிக்க நினைக்க.. என ஏகப்பட்ட “இடை” கதைகள் படத்தில். இறுதியில் வழக்கம்போல் பொட்டித்துக்கிப் போட்டு விளையாடி, உருட்டுக் கட்டையால் அடித்து மயங்கி என் அக்மார்க் சுந்தர்.சி பட கிளைமாக்ஸோடு படம் சுபமாகிறது.

படத்தின் நீளம் ரொம்ம்ம்ப நீளம்.. அதற்குக் காரணம் இதில் இடம் பெற்ற நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையாகவும் இருக்கலாம். படத்திற்கான பட்ஜெட் கொஞ்சம் அதிகம்.. அதற்கு கதையைதான் புதுசா யோசிக்க நேரமில்லை. புது லொகேசன்களை காட்டி கவரலாம் என்று நினைத்து இறங்கி இருப்பதுதான் காரணமாக இருக்கலாம்.. இந்தப் படம் பூஜை போட்ட நாளிலிருந்தே இது காமெடி என்று அறிவித்து இருந்தாலும்.. இண்டர்வெல் வரை சிரிக்கும்படியான காமெடியே இல்லை என்பதற்குக் காரணம் மிர்ச்சி சிவா-வுக்கு தனி அடையாளம் கொடுக்க   இயக்குநர் ஆசைப்பட்டதும் காரணமாக இருக்கலாம். ஹிப் ஹாப் தமிழாவின் இசை வெகு சுமார். அதுவும் பாடல்கள் எதுவுமே மனத்தில் நிற்கவில்லை. இது லாஜிக் இல்லா படம் என்பதால் நடனக் காட்சிகளும் அங்கங்கே புகுத்தப் பட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

மொத்தத்தில் டைம்பாஸ் செய்ய விரும்புவர்கள் தாராளமாக ஒரு தபா தியேட்டருக்கும் போய் பார்க்கலாம்.

 

மார்க் 5 / 2.75