சிபிராஜ் நடித்த ‘சத்யா’ திரைவிமர்சனம்!

ஒவ்வொரு வருஷமும் சர்வதேச அள்வில் கூட குழந்தைகள் தின விழாவை கோலாகலமாக கொண்டாடும் நம் மத்தியில் இருந்த குழந்தைகள் ஆண்டு தோறும்ம் கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நம் இந்தியாவைப் பொறுத்தவரை டெய்லி 180 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். 2015-ம் ஆண்டு வரையில் கடத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 84 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடத்தப்படும் குழந்தைகள் எங்கே செல்கிறார்கள், எப்படி அவர்களை கடத்திச் செல்கிறார்கள் என்பது முழுமையாக விடை காணமுடியாத புதிராகவே உள்ளது என்பதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் என்ற நிலையில் குழந்தைக் கடத்தல் என்ற ஒரு லகானை பிடித்துக் கொண்டு இல்லாமல் இருக்கும்(?) சிபிராஜின் நடிப்பை திறமையைக் கண்டறிய உருவாக்கப்படம்தான் ‘சத்யா’

தன்னை தனித்துவமாக காட்டும் நோக்கிலேயே பெஸ்ட் ஸ்கிரீன் பிளேவுக்காக சகலராலும் பாராட்டப்பட்ட தெலுங்கு திரைப்படமான ‘க்ஷணம்’என்னும் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் சிபிராஜ். மேலும் கடந்த வருஷம் ரிலீஸாகி ப்ளஸ் & மைனஸ் விமர்சனங்களைப் பெற்ற ‘சைத்தான்’ திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பரிந்துரையில் இந்த ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகி -டைரக்ட் செய்திருந்தார்.

படத்தின் கதையை சிம்பிளாக சொல்வதென்றால் ஃபாரினில் வேலைப் பார்க்கும் பேச்சல்ர் பாய் சிபிராஜ், தனது எக்ஸ் லவ்வர் ரம்யா நம்பீசனின் தீடீர் அழைப்பின் பேரில் சென்னைக்கு வருகிறார். இங்கு தனது ஒரே மகள் கடத்தப்பட்டதாக கூறி அதை கண்டுபிடித்து தருமாறு அவரிடம் ரம்யா கோரிக்கை வைக்கிறார். இதையடுத்து சிபிராஜின் ஆர்வ கோளாறில் விசாரணை செய்யும் போது ரம்யாவுக்கு மகளே இல்லை என பலரும் சொல்ல குழப்பமாகிறார் சிபிராஜ் அதிலும் இதை ரம்யாவோட ஒரிஜினல் கணவன், போலீஸ் டெபுடி கமிஷனரான வரலட்சுமி ஆகிரோர் எல்லாம் உறுதிப்படுத்தியதால் சிபிராஜுக்கு பயங்கர குழப்பம் வருகிறது.

அதேசமயம் ரம்யாவின் கொழுந்தன், கார் மெக்கானிக் சதீஷ் ஆகியோரின் சில நடவடிக்கைகள் சிபிராஜுக்கு சந்தேகம் கொடுக்கிறது. இதை தொடர்ந்து போகும் சிபிக்கு அடுத்தடுத்து நடக்கும் பல திருப்பங்கள் அதிர்ச்சி மேல் கொடுக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன..? குழந்தை விவகாரம் உண்மையா..? கற்பனையா என பல கேள்விகளுக்கு விடை காண்பதுதான் ’சத்யா’

குழந்தை கடத்தலில் ஆரம்பிக்கும் படம், முடியும் வரை அதே விறுவிறுப்புடன் பயணிக்கிறது. சிபிராஜ் தனக்கான கேரக்டரை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே கவனம் செலுத்தி வருவதை இந்த ‘சத்யா’ கேரக்டரும் உறுதி செய்கிறது. கோபம், ஆத்திரம், செண்டிமெண்ட், சந்தேகம், சந்தோசம் என கலவையான உணர்வுகளுடன் பயணிக்க முயற்சிகும் சிபிராஜ் அந்த சத்யா கேரக்டருக்காக இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்திருக்கலாம். ஃபாரீன் ரிட்டர்ன் + இன்வெஸ்டிகேட்டிவ் செய்யும் இளைஞனுக்கு தேவையான உடல் மொழியை மாற்றிக் கொள்ளவே இல்லை. கூடவே வரும் யோகி பாபு போக்கும், பேச்சும் சசிக்கவில்லை. ரம்யா நம்பீசன் உண்மையை சொல்கிறாரா, இல்லை அனைத்தையும் மறந்து உளறுகிறாரா என நம்மையே சந்தேக்கப்பட வைக்கும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வழங்க முயற்சி செய்பவர் பாதி மார்குதான் வாங்குகுறார்.

போலீஸ் அதிகாரியாக கெத்தாக வரும் வரலட்சுமி, முதல் பாதியில் சம்பந்தமில்லாத யாரோ ஒரு நபர் போல் பத்தோடு பதினொன்றாக பயணித்தாலும், இடைவேளைக்குப்பின் மீதிக்கதை முழுவதையும் தனது பக்கம் இழுத்துக்கொண்டு தனது இன்னொரு முகத்தை காட்டும்போது அதிர்ச்சிக்கு பதில் ஆயாசம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அதே சமயம்
போலீஸ் அதிகாரியாக கடமை ப்ளஸ் காமெடி என கலகலப்பூட்டும் ஆனந்தராஜ் ரோல் இன்னும் கொஞ்சம் வராதா என்று ஏங்க வைத்துள்ளார். கேரக்டர் ரோலுக்கு மாறி இருக்கும் சதீஷின் ‘பாபுகான்’ கேரக்டர் நாட் பேட். வினோதினி, நிழல்கள் ரவி வந்தார்கள் , சென்றார்கள். சைமன் கிங்கின் இசை புன்னகைக்க வைக்கிறது. அதிலும் இவரின் பின்னணி இசைதான் படத்தின் போக்கை படபடப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகமான ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை வரும் ட்விஸ்ட் நம் பல்ஸை அதிகரிக்க வைப்பதென்னவோ உண்மை. குறிப்பாக குழந்தை பற்றிய மர்மம் உடைபடும் இடமெல்லாம் பார்வையாளருக்கும் அதிர்ச்சியை கொடுப்பதில் ஜெயித்து இருக்கிறார்கள். ஆனாலும் இண்டர்வெல் வரை ரொம்ப பரபரப்பாக நகரும் கதை செகண்ட் பார்ட்டில் அசட்டை தெரிகிறது. எனி வே ஒரு தெலுங்குப் படத்தை அதன் மணம் குணம் காரம் மசால குரையாமல் கொடுக்க முயன்று நம்மூருக்கு தேவையான நடிப்பு மற்றும் சீன்களை யோசிக்காமல தயாரித்து இருந்தாலும் கூட, ஒட்டு மொத்தத்தில் எரிச்சலோ, அப்செட்டோ ஏற்படுத்தாத ஒரு நல்ல திரில்லர் படம்தான் ‘சத்யா’.

தாராளமாக ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம்!

மார்க் 5 / 3 .25
aanthai

Recent Posts

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…

4 hours ago

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…

10 hours ago

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…

21 hours ago

சிம்ஹா நடித்த ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…

22 hours ago

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1300-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கி- சிரியா…

23 hours ago

டாடா – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=23mMdgo0prk

2 days ago

This website uses cookies.