March 31, 2023
படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிலிருந்தே ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. ஜிப்ரானின் இசை இப்படத்தின் தூணாக இருக்கும் என கருதப்படுகிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை   பல மடங்கு கூறியுள்ளது.
புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட தினத்திலிருந்து  சினிமா ரசிகர்களிடையே இந்த ட்ரைலர் அசத்தலான வரவேற்பை பெற்றுவருகிறது. மிக  சுவாரஸ்யமாக, வித்யாசமாக இருக்கும் இந்த ட்ரைலரை   ரசிகர்கள் மட்டுமின்றி வணிக தரப்பினரும் ரசித்து பாராட்டியுள்ளனர்.
”இந்த ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களது உழைப்பிற்கு கிடைத்துள்ள சன்மானமாகும். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமான  வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வரவேற்பால் இந்த படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ட்ரைலரை விடவும் படம் இன்னும் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என உறுதியாக கூறுகிறேன். ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன். ட்ரைலருக்கு  தந்த வரவேற்புக்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நவம்பர் 24 ஆம் தேதி   ரிலீஸாகவுள்ள இப்படத்தை மிகவும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன்” எனக்கூறினார் இயக்குனர் அப்பாஸ் அக்பர்.