March 26, 2023

உலகில் நடக்கும் பெண் குழந்தை திருமணங்களில் 33 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது, 18 வயதுக்கு முன்பாக 10.3 கோடி இந்தியர்கள் திருமணம் செய்கிறார்கள் என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவலின் தாக்கம் அடங்குவதற்குள் இது போன்ற குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுப்பது மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறப்பதை தடுப்பதில், இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஐ.நா., கூறியுள்ளது.

ஐ.நா., மக்கள்தொகை நடவடிக்கை நிதியம், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறக்கும் விகிதம், ஒரு லட்சம் பேருக்கு, 174 ஆக உள்ளது. இதில், உலக சராசரி விகிதம், 216 ஆக உள்ளது. வளர்ந்த நாடுகளில், இந்த விகிதம், 12 ஆக உள்ளது. அதை ஒப்பிடுகையில், இந்தியா, மிகவும் பின்தங்கி உள்ளது.இந்தியாவில், 27 சதவீத குழந்தைகள், 18 வயது பூர்த்தி ஆகும் முன், திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். இதை தடுப்பதில், இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கதேசத்தில், 18 வயதாகும் முன், 59 சதவீத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. நேபாளத்தில், இது, 37 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக உலகில் நடக்கும் பெண் குழந்தை திருமணங்கள் குறித்து ஆக்‌ஷன் எய்ட் இந்தியா ஆய்வு செய்து “ இந்தியாவில் குழந்தை திருமணங்களை ஒழிப்பது: வளர்ச்சி மற்றும் வாய்ப்பு’’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையை நடிகையும், சமூக ஆர்வலருமான ஷபானா ஆஸ்மி நேற்று டெல்லியில் வௌியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது-
உலகில் ஒரு நிமிடத்துக்கு 28 பெண் குழந்தை திருமணம் நடக்கிறது. இதில், 2க்கும்மேற்பட்ட திருமணம் இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில் மட்டும் 18 வயதுக்கு குறைவாக 10.3 கோடி இந்தியர்கள் திருமணம் செய்கிறார்கள். இதில் 8.52 கோடி பெண் குழந்தைகள். ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் மக்களைத் தொகைக்காட்டிலும் பெண் குழந்தை திருமணம் நடக்கிறது. பெண் குழந்தை திருமணத்தை ஒழிப்பதன் மூலம், குழந்தை பிறக்கும்போது தாய் இறக்கும் நிகழ்வுகளில் 27 ஆயிரம் பேரையும், 55 ஆயிரம் சிசு மரணத்தையும், 1.60 லட்சம் குழந்தைகள் மரணத்தையும் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது