September 23, 2021

பிரசாத் தயாரிப்பில் நாளை ரீலீஸ் ஆக உள்ள படம் “ஸ்பைடர் “மகேஷ்பாபு, ராகுல் பிரித்தி சிங் ஜோடி நடித்துள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்ணனி இயக்குனர் முருகதாஸ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். தமிழகத்தில் அதிகமான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள ஸ்பைடர் படத்தை தமிழ்நாடு, கர்னாடகாவில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

லைக்கா நிறுவனம் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, விநியோகம் என இரு துறைகளிலும் வியாபாரம் செய்து வருகிறது.லைக்காதயாரித்து ரீலீஸ், மற்றும் விநியோகம் செய்த எந்த படமும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வெளியான கத்தி அசலை தேத்தவே கடுமையாக போராட வேண்டி இருந்தது.

தற்போது லைக்காதமிழ் சினிமா வியாபாரத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முருகதாஸ் மூலம் ஸ்பைடர் படத்தை வாங்கி உள்ளது.

முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரீலீஸ் ஆகாத சூழலில் இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பு என்கிற விளம்பரத்துடன் களமிறங்குவதால் ஸ்பைடர் படத்துக்கு தமிழ்நாட்டில்அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளது.

தமிழில் அஜீத், விஐயகாந்த், சூர்யா விஜய் என முண்னனிநாயகர்களை முன்னிறுத்தி படங்களை இயக்கி பிரபலமான முருகதாஸ் மகேஷ்பாபுவுடன் இணைந்து தமிழ் படம் இயக்கியுள்ளார்.

இயக்குனர்முருகதாஸ் க்கு என்று தமிழ் சினிமாவில் தனித்துவம்மிக்க ரசிகர் கூட்டம் இல்லை. என்ன தான் நேரடிதமிழ் படம் என கூறினாலும் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு டப்பிங் படமாகவே இங்கு ரசிகர்களால் ஸ்பைடர் காணப்படும்.

நேரடி தமிழ் படங்களே வசூலில் இங்கு தடுமாறிக் கொண்டிருக்கையில் ஸ்பைடர் வசூலில் சாதிக்குமா? என்பதே வியாபார வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.

அஜீத், விஜய்க்கு போட்டியாகவே மகேஷ் பாபு இங்கு களமிறக்கபடுவதாக அவரது ரசிகர்கள் கருதும் வாய்ப்பு இருப்பதால் ஸ்பைடர் படத்தை தமிழ் சினிமாவின் முண்னணி ஹீரோக்களின் ரசிகர் வட்டாரம் குறிப்பாக விஜய், அஜீத், குர்யா ரசிகர்கள்புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ரசிகர் மன்ற வட்டார தகவல்