4 வருஷத்துலே 43,200 முறை ரேப்: மனித கடத்தலில் தப்பிய இளம்பெண் பகீர்

4 வருஷத்துலே 43,200 முறை ரேப்:  மனித கடத்தலில் தப்பிய இளம்பெண் பகீர்

சமீபத்தில் டெல்லியில் இயங்கி வரும் சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 2 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பெண்களையும் மீட்டனர்.
rape girl nov 13
விசாரணையில் அவர்கள் இருவரும் நேபாள நாட்டை சேர்ந்த தாய்-மகள் என்பது தெரியவந்தது. இதில் தாய்க்கு 44 வயது, மகளுக்கு 20 வயது. அவர்கள் இருவரையும் சவுதி தூதரக அதிகாரி ஒருவர் வீட்டு வேலைக்காக அழைத்து வந்து, வீட்டில் அடைத்து வைத்து அவரும், அவரது நண்பர்களும் பல முறை கற்பழித்தும், அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..இது போலத்தான் சர்வதேச பெண் கடத்தல் காரர்கள் விதிகளை மீறி பெண்களை கடத்தி வந்து மத்திய கிழக்கு நாடுகளில் செக்ஸ் அடிமை சந்தைகளில் குவிக்கிறார்கள்.

உலகில் மனித கடத்தலில் தண்டனை பெற்றவர்களில் 10க்கு 3 பெண்கள். மேலும் பெண்கள் கொள்ளை மற்றும் முக்கிய குற்றங்களில் மிகப்பெரிய பங்கை வகிப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து இப்படி விற்பனையாகி சீரழிந்த பெண் ஒருவரை சந்திக்க நேர்ந்தது:

கர்லா ஜாசின்டோ மெக்சிகோ நகரில் உள்ள ஒரு அமைதியான தோட்டத்தில் அமர்ந்து இருந்தார் அவர் . அந்த தோட்டத்தில் இருந்த மலர்களை அவர் பார்வையிட்டு கொண்டு இருந்தார். பொதுமக்கள் அங்குள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர்.அவர் வெறித்தபார்வையுடன் தான் மனித கடத்தலில் சிக்கிய கதையை விவரிக்கிறார்.

அவரது கதை மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் மனித கடத்தல்களின் கொடூரமான உண்மை களை உணர்த்துகிறது. கர்லா போன்றே நிழல உலகில் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்வை அழித்து உள்ளனர். மனித கடத்தல் ஒரு லாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து அட்லாண்டா மற்றும் நியூயார்க் வரை பரவி வருகிறது.மத்திய மெக்சிகோவில்உள்ளனர். டெனான்சினோ நகரில் மனித கடத்தலுக்கு உள்ளாக்கபட்டு இளம் பெண்கள விபசாரத்தில், தள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகன் அதிகாரிகள் தெரிவித்து.

கர்லா கூறும் போது தனது 5 வயதில் தனது தயாரால் நிராகரிக்கபட்டதாகவும் . தனது உறவினரால் 5 வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறி உள்ளார். ஒரு நாளுக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் தான் 43, 200 முறை கற்பழிக்கபட்டதாக கூறுகிறார்.

தான் 12 வயது வயதில் மனித கடத்தல் காரர்களால் குறிவைக்கபட்டதாகவும். பல்வேறு ஜால வார்த்தைகள் கூறி தான் கடத்தப்பட்டதாகவும் கூறினார். நான் சில நண்பர்களுக்காக மெக்சிகோவின் சுரங்க ரெயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு சிறுவன் இனிப்பு பொருள் ஒன்றை விற்பனை செய்து கொண்டிருந்தான்.சிலர் எனக்கு இனிப்பு ஒன்றை பரிசாக கொடுக்க சொன்னதாக எனக்கு கொடுத்தான். 5 நிமிடங்களுக்கு பிறகு ஒரு வயதானவர் காரில் நான் இருந்தேன்.

தற்போது 23 வயதாகும் கர்லா மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான ஆதரவாளராக மாறிவிட்டார். அதனால் தான் தனது கதையை பகிரங்கமாக தெரிவிக்கிறார். இதே கதையை வாடிகன் நகரில் போப் ஆண்டவரிடம் தெரிவித்தார். மேலும் மே மாதம் அமெரிக்க பாராளுமன்றத்திலும் தெரிவித்து இருந்தார்.

கர்லா மனித கடத்தல் மற்றும் விபசாரத்திற்குள் தள்ளுவது என்பது உலகில் மிகப்பெரிய பிரச்சினையாக வளர்ந்து வருவ்தாக தனது செய்தியில் சுட்டிகாட்டி உள்ளார். இது போல் ஆயிரகணக்கான இந்தியா,நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆயிர கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும், சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செக்ஸ் சிறை சாலைகளுக்கு விற்கபடுகின்றனர்.

error: Content is protected !!