September 23, 2021

சென்னை சிறை & பெங்களூரு சிறையெல்லாம் பார்த்தாச்சு – சசிகலா ஆவேச பேச்சு

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி, அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட சசிகலா அந்த எம்.எல்.ஏ.,க்களிடையே சசிகலா பேசிய போது, ”நான் இந்த இயக்கத்தை நடத்த முன் வந்ததுமே, உங்களுக்கு தெரியாது இல்லை. அந்த அளவுக்கு நம் எதிரிகள் வலை பின்னுகிறார்கள். எதிரிகள் என்னை பற்றி நிறைய விசாரித்து இருக்கிறார்கள். இவர் எப்படி பட்டவர்கள், இப்படி விசாரணை நடந்தது. ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுக்கு தோள் கொடுத்து தளபதியாக இருந்து இருக்கிறார். அவருக்கு நல்ல தகுதி இருக்கிறது.எனவே அவரை நாம் ஜாக்கிரதையாக தான் டீல் பண்ண வேண்டும் என்று எதிரி கட்சியினரே கூறியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாட்டை தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். பன்னீர்செல்வம் ஒருவர் இருக்கிறார். அவரையும் என்னையும் ஒத்து பார்க்கிறார்கள். அவர் எதை சொன்னாலும் தலை ஆட்டிக்கொண்டு சொன்னதை கேட்பார் என்று நினைக்கிறார்கள். என்னை பார்த்தால் சிங்கத்துடன் இருந்தவர். குட்டி சிங்கம் வந்து விட்டது. அ.தி.மு.க.வுக்கு புது குட்டி சிங்கம் வந்து விட்டது, இதை எப்படி சமாளிப்பது, எனவே இப்போதே மீன் பிடிப்பதை போல் வலை வீசுகிறார்கள்.

இந்த சிங்கம் எத்தனை வலை வந்தாலும், கிழித்து வெளியே வரும். சிங்கத்துடன் இருப்பது சிங்கங்கள்தான் இது அவர்களுக்கு தெரியவில்லை. சிங்கத்துடன் வருவது சிங்க குட்டிகள் தான் வரும். ஒரு சிங்கம் இல்லை என்றால், இன்னொரு சிங்கம் வரும். இது ஜெயலலிதா நமக்கு கற்று கொடுத்து இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என்று நினைத்து சில எட்டப்பர்கள் செயல்படுகிறார்கள். அவர்களை வைத்து செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இங்கு இருப்பவர்கள் தான் அரசாங்கம். அதை அமைக்க கூடியவர்கள் நாம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நமக்கு துணையாக இருக்கிறார்கள். ஒரே ஒரு மந்திரத்தை நினைத்துக்கொள்ள வேண்டும். சாதாரணமாக இருந்தவர்களை இந்த அளவுக்கு உயர்த்தி காட்டியவர் நம் அம்மா. நம்மை அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
sasikala feb 12
எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறார்கள். அரசை யாரும் எந்த நேரத்திலும் தடை போட்டு நிறுத்தி விட முடியாது. 129 எம்.எல்.ஏ.க்கள் கடல் போல் இருக்கிறார்கள். தடுப்பணை போட்டு தடுக்க முடியாது. அதிமுக, அதன் ஆட்சிக்கு எதிராக எந்தஒரு முயற்சி செய்தாலும் அதில் பலன் ஒன்றும் கிடையாது. அவர்கள் தோல்வி அடைவார்கள். நேற்றைவிட இன்று உங்களை பார்க்கும் சிங்களாக மாறிவிட்டனர். 129 சிங்களுட்டுடன் இது ஒரு சிங்கம். நாம் யாருக்கும் பயப்பட வேண்டாம். நாம்மிடம் வலைபோட முடியவில்லை என்றால் குடும்பத்தாரிடம் வலை போடுவார்கள். நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி, தமிழக மக்களுக்கு நல்லது செல்ல கூடியது. தமிழக மக்களுக்கு அர்பணித்து பணிசெய்து, மீண்டும் அவர்களுடைய அன்பை பெற வேண்டும். இனி நடைபெற உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும். சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாகவும் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு நம்முடைய உழைப்பு இருக்கவேண்டும். அதற்கு நானும் உழைப்பேன், உங்களுடைய உழைப்பும் தேவையானது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட நீங்கள், உங்கள் தொகுதியில் நாம் ஆட்சிக்கு வந்ததும் சுற்று பயணம் செல்ல வேண்டும். இடைபட்ட நேரத்தில் நடந்ததை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் மக்களிடம் பழக வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று, யார் என்பதை காட்டுவதற்கு கோபம் பெரியது கிடையாது. செயல்தான் வேண்டும். அதில் தீவிரமாக இருந்து வெற்றியை ஏற்படுத்தி, அம்மாவின் சமாதிக்கு போய், அவர்களுடைய பாதத்தில் வைக்க வேண்டும்.
நான் பொது செயலாளராக தேர்வு செய்யபப்ட்ட பின்னர் சமாதிக்கு சென்றதும், வெளியே வரமுடியவில்லை. காலடியை எடுக்க முயற்சித்தும், முடியவில்லை. ஈர்ப்பு சக்தியை என்னால் உணர முடிந்தது. இயக்கத்தில் உள்ள நம் தொண்டர்கள் அனைவரும் என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்து உள்ளனர். உங்கள் மீது ஆணையிட்டு கூறுகின்றேன் இந்த இயக்கம், ஆட்சியையை என்னுடைய உயிர் உள்ளவரையில் காப்பாற்றுவேன் என உறுதியளிக்கின்றேன்.
இந்திய இயக்கத்தையும் சரி, ஆட்சியையும் சரி யாராலும் அசைக்க முடியாது, அதில் உறுதியாக உள்ளேன். இந்த கழக்கத்திற்கு பிரச்சனை என்று வந்தால் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன் என சொல்லி அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். ஒரு கஷ்டமான நேரத்தை நாம் பார்க்கிறோம். வசதி வாய்ப்புகளோ ஒரு அமைச்சராக இருந்து இந்த கட்சியையே இரண்டாக பிரிக்க இப்போது பன்னீர் செல்வம் அவர்கள் நம் கையாலை நம் கண்ணை குத்துகிறார்கள். நீங்களும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவள், என்னுடன் இருந்து இந்த நிகழ்ச்சி, கட்சியின் பதிவேட்டில் எல்லோரும் சேர்ந்து பதிய வைக்க வேண்டும். அதை நீங்கள் எல்லாம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் என்னுடன் ஒட்டுமொத்தமாக இருக்கவேண்டும், மக்கள், கழகத்திற்கும் பணியை செய்து மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யவேண்டும். யாராலும் ஒன்னும் செய்ய முடியாது. நீங்களனைவரும் உடன் இருந்தால் எல்லாம் சாதிப்பேன், என்னிடம் தைரியம் உள்ளது, விலைபோகாத தைரியம் யாருக்கும் பயப்பட மாட்டேன்.  பின் வாங்க மாட்டேன், ஆட்சி, கழகத்தை நிலைநாட்டை எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டுமோ அதனை செய்வேன். கலங்க மாட்டேன், நானும் அம்மாவுடன் துணையாக இருந்தேன், இருவரும் சென்னை சிறை மற்றும் பெங்களூரு சிறையையும் பார்த்து உள்ளோம். மீண்டும் வந்து ஆட்சியையும் பிடித்து உள்ளோம். பெண்தானே என பயமுறுத்துகிறார்கள்; அம்மாவிடம் முடியாதது எப்போதும் என்னிடமும் முடியாது.
நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். நாம் அம்மாவின் சமாதிக்கு செல்ல வேண்டும், அங்கிருந்து உறுதி மொழி எடுத்து, உறுதி மொழி எடுத்து கோட்டைக்கு செல்ல வேண்டும். என்னுடன் இங்கு ஒன்றரை கோடிபேர் இருப்பதாக நினைக்கின்றேன். ஒவ்வொரு கிராமத்தில் இருந்து நினைப்பார்கள் நமது கட்சிக்கு பிரச்சனையிருப்பதாக. உங்களுடைய தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி, அம்மா வழிநடத்தி நம்மிடம் கொடுத்து உள்ளார்கள், நம்முடைய தொண்டர்களிடம் சொல்கின்றேன், ஆட்சியை ஆரம்பித்து உறுதிமொழி எடுத்து கோட்டைக்கு போகிறோம். முக்கியமான விஷயம் நீங்கள் எல்லாம் பெரிய வசதி உள்ளவர்கள் கிடையாது. அம்மா வசதியை எல்லாம் பார்க்கமாட்டார். அதனால் தான் ஒரு கோடி மக்கள் நம்மிடம் உள்ளனர். குப்பத்தை சேர்ந்தவர்கள் கூட எம்.எல்.ஏ. ஆகலாம் என ஒவ்வொரு தொண்டனும் அதிமுகவில் உள்ளார். நம்மிடம் பெரிய பொறுப்பு உள்ளது.
அம்மாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும். அம்மாவின் புகைப்படத்தை வைக்கவிடாமல் செய்ய நம் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளனர். அம்மாவின் விசுவாசி என்பதை நிரூபிக்க அம்மாவின் படத்தை திறக்க வேண்டும், அதனை பார்ப்பது வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம். அம்மா கடைசியாக இக்கட்சியை யாராலும் அழிக்கமுடியாது என்றார்கள். பெண்ணை தலைமையாக கொண்ட இயக்கம், இப்போது நானும் வந்து உள்ளேன். இப்போது அம்மா படம் சட்டசபையில் திறக்கப்பட வேண்டும். நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.  இந்த வாய்ப்பை நழுவ விட கூடாது.  திமுக காரர்களை பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உள்ளது. அம்மா புகைப்படம் திறக்கும் பணியை சந்தோஷமாக செய்யவேண்டும், அது அம்மாவிற்கு கொடுக்கும் பெரிய மரியாதை என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர். யாரையும் அடைத்து வைக்கவில்லை. அரசுக்கு எந்தவித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒற்றுமையுடன் உள்ளனர். கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் வேண்டுமென்றே ஊடகங்களில் சில தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அது இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லங்களுக்கு தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி வருவதாக என்னிடம் சொன்னார்கள். இருந்தாலும் இந்த இயக்கத்திற்காக உறவினர்களிடம் சொல்லி குழந்தைகளை பார்க்கச் சொல்லிருப்பதாக என்னிடம் கூறியபோது, அவர்கள் இந்த இயக்கத்தின் மீது எவ்வாறு பற்றாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து என் கண்களில் கண்ணீர் வந்தது.

இப்போது அனைவரும் சுதந்திரமாக பேசியதையும், சுதந்திரமாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். எங்களுக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆளுநர் கால தாமதம் செய்வதற்கு என்ன காரணம் என்று உங்களைப் போன்று நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு காரணம் தெரிந்திருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்”இவ்வாறு அவர் கூறினார்.

 

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பற்றி கேட்டபோது, ‘வழக்கில் தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம், அதற்கு முன்பே நாம் ஏன் ஒரு முடிவுக்கு வர வேண்டும்? என்றார் சசிகலா.