September 27, 2021

34 ஆண்டுகாலமாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருபவர் குற்றவாளி இல்லை! – அமெரிக்கா நடப்பு சேதி

அமெரிக்காவில் சுமார் 34 ஆண்டுகாலமாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருபவர் குற்றவாளி இல்லை என தற்போது நிரூபணமாகியுள்ளது.
usa prison aug 17
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த லூயிஸ் போகல்(63) கடந்த 1976-ஆம் ஆண்டு டீன் லாங்(15) என்பவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற குற்றத்திற்காக கூட்டாளிகள் மூவருடன் 1981-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மனநோயாளியின் சாட்சிப்படி கைது செய்யப்பட்ட இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் செய்யாதவர்களுக்கு தவறாக தண்டனை அளிக்கப்படும்போது, அந்த அப்பாவிகளுக்காக போராடி அவர்களை தண்டனையிலிருந்து காக்கும் அமைப்பு ஒன்று லூயிஸ்-க்கும் உதவ முன்வந்தது. டீன் லாங்கின் பலாத்கார வழக்கில் ஆதாரமாக இடம்பெற்றிருந்த டி.என்.ஏ தகவல்களை ஆய்வு செய்து அதில் லூயிஸுடைய டி.என்.ஏ. இடம்பெறாத காரணத்தால் அவர் பலாத்காரம் செய்யவில்லை என்று இந்த அமைப்பு நிரூபணம் செய்துள்ளது.எனினும், அவர் அந்தப் பெண்ணின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், அதைக் குறித்து மறு ஆய்வு செய்து வரும் செப்டம்பர் 14-ம் தேதி இதுதொடர்பான தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடன் கைது செய்யப்பட்ட மற்ற மூவரும், தெளிவான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டனர். கடந்த 34 ஆண்டு சிறை தண்டணைக்குப் பிறகு தற்போதுதான் லூயிஸ் முதன்முறையாக ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லூயிஸ் கைது செய்யப்பட்டதற்கு மூன்று மாதங்கள் முன்பு அவர் திருமணம் முடித்திருந்தார். அவரது மனைவி லூயிஸ் ‘எந்தத் தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையை எப்போதுமே கைவிடவில்லை’ என தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் உயிரோடுள்ள இன்னும் இருவரும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.