நம்ம பிள்ளைகளை பின்தொடரும் ஸ்மார்ட் வாட்ச்! – -வீடியோ

நம்ம பிள்ளைகளை  பின்தொடரும் ஸ்மார்ட் வாட்ச்! – -வீடியோ

குழந்தைகள் இன்றைய நாளில் நிறைய வகுப்புகள் மற்றும் விளையாட்டுகள் என பெற்றோரை விட்டு தனித்து தூரமாக இயங்க வேண்டி உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை பள்ளிக்கோ, வெளியில் சிறப்பு வகுப்புகளுக்கோ அனுப்பிவிட்டு சரியான நேரத்தில் இல்லத்திற்கு வரவில்லை என்றால் ஏற்படும் தவிப்பிற்கும், கவலைக்கும் அளவே இல்லை.

kids jy 18

இந்த பிரச்சினைகளிலிருந்து மீள குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் பயணங்களை கண்காணிக்க ஏற்ற குழந்தைகள் ஸ்மார்ட் வாட்ச்கள் வந்துள்ளன.

பெரியவர்களின் ஸ்மார்ட் வாட்ச்களை போன்று பெரிய வசதிகள் இல்லாதவாறு அதே நேரம் குழந்தைகளின் பாதுகாப்பு வசதிக்கும், பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

குழந்தைகளின் பாதுகாப்பு வளையமாக திகழும் ஸ்மார்ட் வாட்ச்:

குழந்தைகள் எங்கு செல்கிறது என்பதை நமது செல்போனில் இருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் அதில் குறிப்பிட்ட 5 முதல் 10 வரையிலான போன் நம்பர் சேமிப்புக்கு வசதியும் உள்ளது. அதன் மூலம் சுலபமாக குழந்தைகள் எந்த பிரச்சினையாயினும் தொடர்பு கொண்டு பேச இயலும்.

அதற்கென சிறு சிறு வண்ண பட்டனை அழுத்தினால் போதுமானது. சில ஸ்மார்ட் வாட்ச்களில் சிறு தகவல்கள் அனுப்பும் வசதியும் உள்ளது. அலாரம், காலண்டர் ஆலார்ட்ஸ், விளையாட்டு வசதிகளும் இத்தகைய ஸ்மார்ட் வாட்ச்களில் உள்ளது. குழந்தைகளுக்கு ஏதும் ஆபத்து என்றால் ஓர் பட்டனை அழுத்தினாலே அதில் சேமிக்கப்பட்ட பெற்றோர் தொலைபேசிக்கு உடனே அழைப்பு ஒலி போய் விடும். மேலும் இதில் உள்ள GPS கருவி மூலம் குழந்தை எந்த இடத்தில் உள்ளது என்பதையும் கண்காணிக்க முடியும்.

குழந்தைகளை சரியான வழியில் அழைத்து செல்லும் ஸ்மார்ட்வாட்ச்:

குழந்தைகள் தங்கள் பள்ளி, சிறப்பு வகுப்பு, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும்போது வழித்தவறி செல்லாமல் இருக்க ஸ்மார்ட் வாட்ச் உதவி புரிகிறது. ஸ்மார்ட் வாட்ச்-யில் உள்ள வழித்தட பதிவேட்டில் பதிவு செய்து விட்டால் குழந்தை ஏதோ நினைப்பில் பாதை தவறினாலும் உடனே பீப் ஒலி செய்து அவர்களுக்கு சரியான வழியை கூறும். இதன் மூலம் குழந்தைகளும் தனியாக வகுப்புகளுக்கு சென்றுவர முடியும். பெற்றோர் குழந்தையை பற்றி அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

பல வண்ணங்களில் கிடைக்கும் விடெக் ஸ்மார்ட் வாட்ச்கள்:

விடெக் கிட்ஸீம் என்ற ஸ்மார்ட் வாட்ச் பிரத்யோகமான குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச் ஆகும். இதில் குழந்தைகள் விரும்பும் வகையில் நீலம், ஊதா, பிங்க், பச்சை, வெள்ளை போன்ற வண்ணங்களில் ஸ்மார்ட் வாட்ச்கள் கிடைக்கின்றது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வசதியும், தானாகவே புகைப்படங்களை பிரேம் செய்யும் வசதியும் உள்ளது. பேசுவதை ரெக்கார்ட் செய்வது, வகுப்புகளுக்கான நேரத்தை கூறுவது, பல விதமான கடிகார முன் திரைகள் கொண்டும் உள்ளன.

குழந்தைகளுக்கு வழித்துணையாக உதவும்-பிலிப்:

சுலபமாய் கழட்டி மாட்டும் வகையிலான இந்த பிலிப் ஸ்மார்ட் வாட்ச்சில் போன்செய்து பேச முடியும், GPS, GSM, வை-பை வசதியுடன் கண்காணிக்க முடியும், ஆபத்து நேரத்தில் ஒரே பட்டனை அழுத்தினால் உடனே பெற்றோருக்கு அவர் பற்றிய தகவலை தெரிவித்து விடும். குழந்தைகளின் பாதுகாப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் சிறந்த நண்பனாக விளங்கும் பிலிப் ஸ்மார்ட் வாட்ச்சும் பல வண்ணங்களில் கிடைக்கின்றது. ஏராளமான நிறுவனங்கள் வித்தியாசமான வடிவமைப்புடன் புதிய குழந்தைகள் ஸ்மார்ட் வார்ச்-யை தயாரித்து வழங்குகின்றன.

error: Content is protected !!