30 எம்.பி.க்களில் ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

30 எம்.பி.க்களில் ஒருவர் கொலை குற்றவாளி: கணக்கெடுப்பில் தகவல்

2009–ம் ஆண்டில் வெற்றி பெற்ற 30 எம்.பி.க்களுக்கு ஒருவர் கொலை குற்றவாளி என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அரசியலில் குற்றவாளிகள் பெருகி விட்டார்கள். இதனால் லஞ்ச ஊழல் பெருகிவிட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 2009–ம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தற்போதுள்ள எம்.பி.க்கள் மீது கொலை வழக்கு உள்ளது.
sep mp office
இதை நாட்டின் மக்கள் தொகையுடன் (25 வயதுக்கு மேற்பட்டவர்களுடன்) கணக்கிடும் போது 1061 பேரில் ஒரு எம்.பி. கொலை குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதே போன்று 23 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எம்.பி.க்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவற்றை மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4,220 பேரில் ஒரு எம்.பி. மீது இக்குற்றச்சாட்டு உள்ளது.

இவை தவிர 54 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எம்.பிக்கள் மீது கடத்தல், கற்பழிப்பு, கொலை மற்றும் கொள்ளை சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளன. நாட்டின் மக்கள் தொகை கணக்குடன் ஒப்பிடும் போது 5510 பேரில் ஒரு எம்.பி. மீது இந்த புகார் உள்ளது.

கடத்தல், கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணை 54 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எம்.பி.க்கள் மீது நடந்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் 3,832 பேரில் ஒரு எம்.பி. சம்பந்தப்பட்டுள்ளார்.

கலவர வழக்குகளில் 54 எம்.பி.க்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சம்பந் தப்பட்டுள்ளனர். இது மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 1,436 பேரில் ஒரு எம்.பி. என தெரிய வந்துள்ளது. கற்பழிப்பு வழக்கை பொறுத்தவரை 2009–ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த எம்.பி. மீதும் வழக்கு நிலுவையில் இல்லை.

1 in 30 MPs faces murder charge, for rest of India it’s only 1 in 1,061
******************************************************************
It’s often argued that criminalization of politics merely reflects the increasing criminalization of society. However, an analysis of data on Lok Sabha members facing criminal charges and official figures on crime in India show that the proportion of people facing such charges is way higher among Lok Sabha MPs than in the population as a whole. In fact, for a range of serious charges, the rate among LS members is anywhere between 20 and 200 times higher.

error: Content is protected !!