August 20, 2022

வாங்க கேப்டன்.பேசலாம்! – தேமுதிக நிர்வாகிகள் + போங்கடா புண்ணாக்கு – விஜய்காந்த் அறிவிப்பு!

தேமுதி கொள்கைப் பரப்புச் செயலாளரும், ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினருமான சந்திரகுமார், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்மிடிப்பூண்டி பேரவை உறுப்பினர் சி.எஸ்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு உண்மையான விசுவாசிகளாக கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் நிர்பந்தங் களுக்கு இடையே பணியாற்றி வந்தோம்.அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைந்த ஒரே கட்சி தேமுதிகதான். கட்சியினர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமம் முதல் நகரம் வரையுள்ள அனைத்து தொண்டர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஆர்பாட்டம், போராட்டங்களுக்கு நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்று வந்தனர்.
dmdk mar 5a
இந்நிலையில் அதிமுக ஆட்சியை அகற்றுவேன் என்று கூறிவந்தார் விஜயகாந்த். இதற்காக எந்த தியாகத்தையும் செய்வேன் என்றும் கூறிவந்தார்.எனினும், திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். இதுகுறித்து நிர்வாகிகளிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.மார்ச் 23 ஆம் தேதி அவசர வேலை இருக்கிறது தலைமை அலுவலகம் வாருங்கள் என அழைத்த விஜயகாந்த், திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார்.

‘திமுகவுடன் பேசுகிறேன், இவ்வளவு சீட் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள்’ என கூறிய விஜயகாந்த் ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்களின் மற்றும் தமிழக மக்களின் மனநிலைக்கு மாறாக திடீரென்று மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துவிட்டார்.தேமுதிகவில் உள்ள 95 சதவீதம் பேர், திமுகவுடன்தான் இணைய வேண்டும் என விரும்புகின்றனர். மக்கள் நலக் கூட்டணியால் அதிமுகவை வீழ்த்த முடியாது. எனவே முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

ஒரு கட்சியில் தலைவர் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் எதார்த்த நிலை. எனினும், தொண்டர்கள் விரும்பும் முடிவையும் தலைவர் எடுக்க வேண்டும்.கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்தி கடந்த 24 ஆம் தேதி தலைவர் விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதினோம். எனினும், இதுவரை அதற்கு பதில் இல்லை.நாங்கள் யாரும் தேமுதிகவிலிருந்து விலகவில்லை. நாளை பிற்பகலுக்குள் விஜயகாந்த் கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும்” என்றனர்.

இந்நிலையில் தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜெ.விஸ்வநாதன்,

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், அவரவர் வகித்து வந்த கழகப் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் இன்று (05.04.2016) முதல் நீக்கப்படுகிறார்.

இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக ஏ.வி.ஆறுமுகம்(MC) (மாவட்ட கழக அவைத்தலைவர்), திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக ஸ்ரீதர் (முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர்), சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு (கழக மாணவரணி துணைச்செயலாளர்), ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.கே.சுப்பிரமணி (கழக நெசவாளர் அணி செயலாளர்), ஈரோடு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பா.கோபால் (மாவட்ட கழக துணைச்செயலாளர்) ஆகியோர் இன்று (05.04.2016) முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு அந்தந்த மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை கழக, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து கழகம் சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடவேண்டும்” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.