October 21, 2021

எம்.எல்.ஏ.சீட் வேணுமா? எம்.ஏல்.ஏ.சீட்? – கூவி அழைக்கும் இளைஞர் கூட்டமைப்பு

தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர்கள் அமைப்புகள் ஒன்றினைந்து, வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தகுதியான இளைஞர்களை போட்யிட வைக்க முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தி வரும் இந்த அமைப்பினரிடம் இதுவரை 5 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். இந்த 5 ஆயிரம் பேரில் இருந்து 234 பேரை தேர்வு செய்யும் பணி யில் ஈடுபட்டுள்ள இந்த இளைஞர் கூட்டமைப்புக்கு தலைவர், செயலாளர் போன்ற தலைமை என்பது கிடையாது, இதில் உள்ளவர்கள் அனைவரும் சமமே என்று கூறும் இவர்கள், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், கடை தெருவில் கூட்டம் உள்ளிட்ட மக்களுக்கு இடையூறு அளிக்கும் எந்த செயலிலும் ஈடுபடாமல், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்களாம். ஏற்கனவே தனி தனியாக பல சமூக பணிகளில் ஈடுபட்டு வந்த இவர்கள், தமிழகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக தற்போது ஒன்றினைந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
mla feb 2
இளைஞர் கூட்டமைப்பு, குறித்தும் இந்த அமைப்பின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட
விரும்புபவர்கள் எப்படி இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து, இந்த அமைப்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 234 தொகுதிகளிலும் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான “விதை” தமிழக இளைஞர்கள் மூலம் விதைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மாற்றத்தை எதிர்நோக்கும் நேர்மையான திறமையுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுவான கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர் தேர்வு முறைகள் மூலம் இளைஞர் கூட்டமைப்பாக தேர்தல் களம் காணுகின்றனர். இதற்கான முயற்சி கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்க பட்டது.

நம்மை காப்பாற்ற வானிலிருந்து யாராவது ஒரு தலைவர் வருவார் என எண்ணாமல், மாற்றத்தை உருவாக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞனும் தலைவராக உருவாக வேண்டும் என்பதே நமது எண்ணம். ஒரு தனி நபரை முன்னிறுத்தாமல், நேர்மையான இளைஞர்களையும் மற்றும் தெளிவான கொள்கைளையும் முன்னிறுத்தி கூட்டுத்தலைமை மூலம் மக்களை சந்திக்க உள்ளோம். வேட்பாளருக் காக பல்வேறு முதல்கட்ட கேள்விகளை இணைய தளங்கள் (வாட்ஸ்அப், பேஸ்புக்) மூலமும் பரவ விட்டு அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அதிலிருந்து சுமார் 300 பேருக்கு நேர்முக தேர்விற்கு அழைப்பு விடுத்து உள்ளோம்.

நேர்முக தேர்வு செய்ய 20 பேர் கொண்ட இளைஞர் குழு உருவாக்கப்பட்டு, தெளிவான கேள்விகளை வேட்பாளரிடம் தொடுக்க சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இளைஞர் வேட்பாளர் தேர்வு பற்றிய செய்தி பலரையும் சென்று சேரும் போது, நேர்மையான பலரும் வர வாய்ப்புள்ளது. கூடிய விரைவில் 234 தொகுதில் போட்டியிடும் அரசியல் ஆர்வம் உள்ள நேர்மையான, திறமையான, அர்ப்பணிப்பு கொண்ட இளைஞர்களை முன்னிறுத்துவோம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு 234 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே தெரிகின்றது. வார்டு கவுன்சிலர், மேயர், நகராட்சி தலைவர் என 1.25 லட்சம் அரசியல் சார்ந்த பதவிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் அக்டோபர் மாதம் வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் போட்டியிடுவர்.

“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்” என இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு கின்றனர். தற்போது அரசியலிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கும் முயற்சியில், நாளைய தலைமுறையை காக்க நேர்மையான இளைஞர்கள் களம் காணுகின்றனர்.எ ந்தெந்த தொகுதியில் அதிகமாக செயல்வீரர்கள் கிடைக்கின்றனரோ, அங்கு முழுமையாக பிரச்சாரம் செய்வோம். சமீபத்திய வெள்ளத்தில் இளைஞர்கள் இறங்கி வேலை செய்தது போல, ஒவ்வொரு வராலும் தன்னால் இயன்ற நிதியை வைத்து, இளைஞர்கள் மற்றும் மக்களே பிரச்சாரம் செய்து வேட்பாளரை தேர்வு செய்வர்.

தமிழக இளைஞர்களுக்கு தங்களின் ஆதரவு தர, செயல்வீரராக செயல்பட, வேட்பாளராக நிற்க, கொள்கைகள் மற்றும் மேலும் பல விவரங்களுக்கு www.youthpolitics.in என்ற இணைய தளத்திலும் காணலாம். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 7871866096, 9788304668, 9962265231″ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.