October 24, 2021

தீவிரவாதிகளின் பட்டியல்! – ஐரோப்பா போலீஸ் வெப்சைட்டில் ரிலீஸ்

அண்மைக்காலமாக, உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையையே சந்தித்து வருகின்றன.
most wanter
இந்நிலையில், உலக அளவில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் மிகவும் அபாய கரமான தீவிரவாதிகளின் பட்டியலை www.eumostwanted.eu என்ற புதிதாக துவங்கப் பட்டுள்ள இணையதளத்தில் வெளியிட் டுள்ளது ஐரோப்பியன் போலீஸ். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த இணைய தளத்தில் உள்ளவர்களை பற்றி துப்பு கொடுக்கலாம். இதற்கு தக்க சன்மானமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாரீஸ் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி சலாஹ் அப்தேஸ்லாம் உள்பட 45 ஆபத்தான தீவிரவாதிகளின் விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த இணையதளம் 17 மொழிகளில் தகவல்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.