October 18, 2021

சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு இந்த ஏ1 வகை பாலும் ஒரு முக்கியக் காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த ஏ1 வகை பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இந்தப் பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க செய்யும் என இயற்கை விவசாய ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சிப் பிரிவு மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
ஒரு பசு பால் சுரக்க வேண்டுமென்றால் அது கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்தக் கன்றைப் பார்க்கும்போது தாய் மாட்டுக்கு இயக்குநீர் (hormone) சுரந்து அது பாலை சுரக்கத் தூண்டும். ஆனால், இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால், மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில் ஊசியின் மூலமாகச் செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீரின் அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈஸ்ட்ரோஜென் (Estrogen). இது பெண்ணிய இயல்பைத் தூண்டும் இயக்குநீராகும். இந்த ஈஸ்ட்ரோஜென் கலந்த ஏ1 பாலை அருந்தும் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள்.
தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் ஏ2 பாலை சுரக்கக் கூடியவை. இவை பாலை குறைந்த அளவே சுரந்தாலும், அது நமது உடலுக்கு எந்தவிதத் தீங்கையும் உண்டாக்குவதில்லை என்றார் அவர்.
ஜெர்ஸி பசுக்கள் ஆதிக்கம் செலுத்த…
தமிழகத்தில், நாட்டு மாடுகளின் சாணத்தில் இருந்து பெறப்படும் பொருள்களின் மூலத்திலிருந்தே பூச்சிக்கொல்லி, உரம், பஞ்சகாவியா போன்ற இயற்கை விவசாயத்துக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், ஐரோப்பிய இனமான ஜெர்ஸி வகை மாடுகளின் சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன் தராது. ஐரோப்பியர்கள் இயற்கை விவசாயத்துக்கு உதவும் மாட்டினங்ககளை அழிப்பதற்காக, இந்தியா முழுவதும் வெண்மைப் புரட்சி என்ற திட்டத்தைச் செயல்படுத்தி, கிராமங்களுக்குச் சென்று ஜெர்ஸி பசுக்களை விநியோகித்தனர். இதனால், வட மாநிலங்களில் படிப்படியாக நாட்டு மாடுகள் அழிந்தேவிட்டன.
ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்ற வீர விளையாட்டு இருந்ததால் காளைகள் காப்பாற்றப்பட்டு வந்தன. எனவே, தமிழகத்திலும் ஜெர்ஸி பசுக்களின் ஆதிக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கப்பட்டுள்ளதாக இயற்கை வேளாண் ஆர்வலர்கள் கூறுகின்றனர்