மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதை!

மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதை!

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் வெளியிட்டு வரும் விண்டோஸ் இயங்குதள மென்பொருளுக்கு அண்மையிதான் 30 வயதானது. Microsoft நிறுவனத்தின் வரலாற்றுச் சரித்திரத்தை அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பவர்களே! இப்போது Channel9 என்கிற இணையத் தளத்தில் “The History of Microsoft” என்கிற ஒரு காணொளித்தொடர் நிகழ்ச்சியை நீங்கள் காணலாம் .மைக்ரோசாப்ட் நிறுவனம் இது வரையில் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தாண்டி வந்த தடைகளைப்   பற்றியும் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Bill Gates மற்றும்  Paul Allen ஆகிய இருவரும் சேர்ந்து எப்படியெல்லாம் வெற்றிநடை போட்டனர் என்பதை இந்தப் படம் விவரிக்கும்.இது வரை வேறு எங்கும் காண இயலாத மைக்ரோசாப்ட் பற்றிய பல புகைப் படங்களைக் காணவிருக்கிறீர்கள்.1975ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டுகளாக விவரிக்கப்பட்டுள்ளது
Microsoft-Windows-History
தற்போது உலகம் முழுவதும் 75 சதவீத கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்குதளம் இயங்கி வருகிறது. முதன்முறையாக 1983-ம் ஆண்டு உலகின் மிகப்பிரபலமான ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் அறிமுகமானது. அப்போது வெளியிடப்பட்ட அந்த மென்பொருளுக்கு விண்டோஸ் 1.0 என பெயரிடப்பட்டது.

பிறகு, மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் அந்த விண்டோஸ் ஓ.எஸ்-க்கு இண்டர்பேஸ் மேனேஜரை இணைத்தார். அதற்கு பிறகு, பெயிண்ட், கால்குலேட்டர், கார்டுபைல், நோட்பேட், வேர்டுபேர்டு உள்ளிட்ட அப்ளிகேஷன்களுடன் மேம்படுத்தப்பட்டது. 64 பிட் கலர் இண்டர் பேஸூடன் 1 எம்.பிக்கும் குறைவான சைஸில், 256 கிலோ பைட்ஸ் குறைந்தபட்ச இருப்பு தேவையுடன் டபுள் சைடு பிளாப்பி டிஸ்க் டிரைவ் மற்றும் கிராபிக்ஸ் அடாப்டர் கார்டுடன் வெளிவந்தது.

பிறகு, விண்டோஸ் வாஷர் மற்றும் துணியுடன் முதல்முறையாக பிரஸ் கிட்டுடன் விண்டோஸ் 1.0 வெளிவர ஆரம்பித்தது. 1988-களில் உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ரோசாப்ட் உருவெடுத்தது. அதன்பிறகு, அமோக விற்பனையை அடுத்து முதல்முறையாக 32 பிட் வெர்ஷனில் பிஸினஸ் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு விண்டோஸ் என்.டி., 3.1 ஆகியவை வெளியானது. பிறகு, ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், மினிமைஸ், மேக்ஸிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்களுடன் வெளிவர துவங்கியது.

தனது 14 வருட வரலாற்றில் முதல்முறையாக 1996-ல் பிளைட் சிமுலேட்டர் வசதியுடன் முதல்முறையாக விண்டோஸ் 95 வெளியானது. பிறகு, 1998-ல் முதல்முறையாக வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வகையில் எம்.எஸ். டாஸூடன் விண்டோஸ் வெளியானது.

பிறகு, 2001-ல் மைக்ரோசாப்ட்டின் வெற்றிகரமான இயங்குதளமாக விண்டோஸ் எக்ஸ்.பி. வெளிவந்தது. அதிக மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷன் மற்றும் மெமரியுடன் எக்ஸ்.பி. வெளிவந்தது. அதற்கடுத்ததாக, 3 முக்கிய விண்டோஸ் இயங்குதள பதிப்புகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.  விண்டோஸ் நேஷ்வைல், விண்டோஸ் கெய்ரோ, விண்டோஸ் நெப்டியூன் ஆகியவை வெளிவரவே இல்லை.

பிறகு, விண்டோஸ் விஸ்டா வெளிவந்தது. அதிலிருந்து சற்று இண்டர்பேஸ் மற்றும் கிராபிக்ஸ் மேம்படுத்தப்பட்டு நவீன வசதிகளுடன் வெளிவந்தது விண்டோஸ் 7. உலகம் முழுவதும் 8 மில்லியன் கம்ப்யூட்டர்களை இந்த மென்பொருள் கவர்ந்திழுத்தது. வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த மென்பொருளே. 2009-ல் இதன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

பிறகு, விண்டோஸ் 8, 8.1, 10 என அதன் தொடர் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்றளவும் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவது விண்டோஸ் இயங்குதளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!