கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாளும் கர் நாடகாவில் நடக்க இருக்கும் அசெம்பளி எலெக்‌ஷனில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில் இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 2400-க்கும் மேற்பட் டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் வருகிற மே மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர் தல் நடத்தப்பட உள்ளது. மே 15-ம் தேதி முடிவுகள் வெளியாகும். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ம் தேதி தொடங்கி, நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. முதல்வர் சித்தராமையா மைசூரு மாவட்டத் தில் உள்ள சாமுண்டீஸ்வரி மற் றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி ஆகிய இரு தொகுதிக ளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாதாமி தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக முன் னாள் அமைச்சர் ஸ்ரீராமலு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சித்தராமை யாவும் ஸ்ரீராமலுவும் ஒரே நாளில் பேரணியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததால் பாதாமியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஷிகாரிபுரா தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடும் வருணா தொகுதியில் போட்டியிட எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா விருப்பம் தெரிவித்தார். ஆனால் பாஜக மேலிடம் அவருக்கு வாய்ப்பு தராததால் மைசூருவில் பாஜக அலுவலகம் நேற்று சூறையாடப்பட்டது. இதேபோல மண்டியா தொகுதியில் முன்னாள் அமைச்சரும் நடிகருமான அம்பரீஷூக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்தது. ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து திடீரென தலைமறைவானார். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை முதல்வர் சித்தராமையாவை சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம் அவசரமாக ரவிகுமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து ரவிக்குமார் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத முதல்வர் வேட்பாளருமான‌ குமாரசாமி,சென்னபட்னா மற்றும் ராம்நகர் ஆகிய 2 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியிலும் பாஜக முன்னாள் முதல்வர் ஜெக தீஷ் ஷெட்டர் ஹூப்ளி ம‌த்திய தொகுதியிலும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதேபோல காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களும் சுயேச்சைகளும் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த 17-ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல், மறுநாள் பசவ ஜெயந்தி விடுமுறை மற்றும் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 7 நாட்கள் நடந்தது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய குடியரசு கட்சி மற்றும் அதிமுக உட்பட 30-க்கும் மேற்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர 300-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.

error: Content is protected !!