Exclusive

அந்தமான்& நிக்கோபார் தீவுகளுக்கு பெயர் சூட்டினார் பிரதமர் மோடி!

ம் நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின் 126ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நேதாஜி பிறந்தநாளை பராக்ரம் திவஸ் என்ற பெயரில் அரசு நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நேதாஜி பிறந்தநாளில் அவரையும் நாட்டின் ராணுவ வீரர்களையும் பெருமை படுத்தும் விதமாக அந்தமானில் உள்ள பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ராணுவத்தின் மிக உயரிய விருதானது பரம்வீர் சக்ரா விருது. போர்களத்தில் மிக தீரமான சாகசத்தை செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசு இந்த பரம்வீர் சக்ரா விருதை வழங்குகிறது. இந்த விருதை இதுவரை 21 ராணுவ வீரர்கள் பெற்றுள்ளனர்.

21 தீவுகளில் அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டது. அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ சந்திரபோஸ் தீவில் அமைய உள்ள அவரது நினைவகத்தின் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”அந்தமான் நிகோபாரில் உள்ள பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு தனது முன்முயற்சியின் மூலம் பிரதமர் மோடி பெயர்களை வைத்துள்ளார். இந்த தீவுகளுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம், அவர்களின் தியாகம் பூமி உள்ளளவும் நீடித்து நிலைக்கும். அதோடு, இதன்மூலம் நமது ராணுவத்தின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”அந்தமான் – நிகோபாரின் 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதாளர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம் நாம் அளிக்கும் செய்தி ஒன்றுதான். ‘ஒரே பாரதம்; சிறந்த பாரதம்’ என்பதுதான் அது. பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் ஒரே தீர்மானம் ‘முதலில் இந்தியா’ என்பதுதான். அவர்களின் பெயர்களை வைத்திருப்பதன் மூலம் அவர்களின் தீர்மானம் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும்” என தெரிவித்தார்.

aanthai

Recent Posts

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

12 hours ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

1 day ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

2 days ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

2 days ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

2 days ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

2 days ago

This website uses cookies.