September 27, 2021

கிறுக்காதீங்க டாக்டர்! பிரிஸ்கிரிப்ஷனை கேப்பிட்டல்லே எழுதுங்க!

டாக்டர்கள், பிரிஸ்கிரிப்ஷன் எனப்படும் மருந்து சீட்டுகளில் எழுதும் மருந்துகளின் பெயர்களை எளிதில் படிக்க முடியாது என்று பரவலான கருத்து உள்ளது. மருந்து கடைக்காரர்கள், அதை படித்து புரிந்து கொண்டு, சரியான மருந்துகளை எடுத்துக் கொடுத்தால் பிரச்சினை இல்லை.அவர்களும் புரியாமல், தவறான மருந்துகளை எடுத்துக் கொடுத்து விட்டால், சில நேரங்களில் அது உயிரிழப்புக்கும் காரணமாகி விடும்.
doctor pres
இதுகுறித்து, கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தின்போது, எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, டாக்டர்கள் மருந்து பெயர்களை பெரிய எழுத்தில் எழுதும்வகையில், விதிமுறைகளை திருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார்.

அதன்படி, இந்திய மருத்துவ கவுன்சில் ஒழுங்குமுறை விதிகள்–2002–ன் கீழ், மத்திய சுகாதார அமைச்சகம், ஓர் அறிவிக்கையை அரசிதழில் வெளியிட உள்ளது. அதில், டாக்டர்கள், இனிமேல் மருந்து சீட்டுகளில் மருந்துகளின் பெயர்களை பெரிய (கேபிடல்) எழுத்துகளில் எழுதுவதுடன், மருந்துகளின் மருத்துவ வகை பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் மாயவரத்தான் ரமேஷ் குமார் ”இதற்கான அறிவிப்பை அரசிதழில் மத்திய சுகாதார அமைச்சகம் வெகு விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிகின்றன.வரவேற்கத்தகுந்த மாறுதல்கள்.கொடுமை என்னவென்றால் இதற்கான சட்டதிருத்தம் கடந்த 2002-ம் ஆண்டிலேயே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (https://www.facebook.com/mayavarathaan/posts/10205418082565173).
ஆனால் என்ன காரணமாகவோ இத்தனை காலமாக நடைமுறைக்கு வரவேயில்லை. சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, அரசிதழில் வெளியிடப்படவேயில்லை.இப்போதாவது பிடிக்கிறதா பார்ப்போம்.(முந்தைய நிலைத்தகவல்களில் ஒன்று : https://www.facebook.com/mayavarathaan/posts/10205406953566955)” என்று தெரிவித்துள்ளார்