September 25, 2021

நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவும் நவீன ஸ்பேஸ் பார் தயார்!

கணனி உபயோகிப்பாளர்களுக்கு அதிக நேரம் வீணாவது டைப் செய்து பின்பு மவுஸ் பேடில் அதை க்ளிக் செய்யவோ அல்லது வலது புறம் இருக்கும் அப் டவுன் ஏரோவை பயன்படுத்தி தான் பேஜை மேலும் கீழும் இயக்க முடியும் என்பதால் உள்ள குறைபாடு. மிகவும் குறைவான நேரத்தில் எப்படி அதிக வேலைகளை செய்ய முடியும் என்று ஒவ்வொரு நாளும் தீவிரமாய் ஆராய்ந்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ravi 9
இதன் விளைவாக நம் அதிகமாக பயன்படுத்தும் ஸ்பேஸ் பார் என்னும் பெரிய பட்டன் கீபோர்ட்டில் எதற்க்கு வெறும் ஸ்பேஸாக இருக்கிறது என்று மாற்றி வடிவமைத்து இருக்கின்றனர். இதன் மூலம் மவுஸின் அத்தனை பயன்பாடு மற்றும் அப் டவுன் ஸ்கோரோலிங் அது போக பல கீ போர்ட் ஷார்ட்கட்களை இங்கே போட்டிருக்கும் படங்களை போல் செயல்படுத்த முடியும் என நிரூபித்துள்ளனர்.

இந்த ஸ்பேஸ் பட்டன் இது வரை வெறும் பட்டனாக இருந்த ஒன்று இனிமேல் சென்ஸார் மற்றும் மவுஸ்க்குன்டான சர்ஃபேஸ் கொண்டதாக இருக்கும் என்பது தான் இதன் தனி சிறப்பு. இது வரும் காலங்களில் தனி கீ போர்ட் மற்றும் அனைத்து லேப்டாப் மட்டும் அல்லாமல் மொபைல் ஃபோன்களிலும் இதை கொண்டு வரும் வேலைகள் இப்பவே அரம்பித்துவிட்டது என்பது தான் மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் நிறைய நேரம் மிச்சமாகுமாம்…..

Biggest Key Space Bar will be having more functions and kill Touchpad and Mouse