ஸ்பெல் பீ போட்டியில் வெற்றி பெற்று இந்திய வம்சாவளி மாணவர்கள் சாதனை!

ஸ்பெல் பீ போட்டியில் வெற்றி பெற்று இந்திய வம்சாவளி மாணவர்கள் சாதனை!

அமெரிக்காவில் 1925-ம் ஆண்டு முதல் மிகவும் மதிப்பு மிக்க போட்டியாக கருதப்படும் ஸ்பெல் பீ என்னும் ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் தேசிய போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
XXX EE_05272015_2015_SPELLING_BEE__27363.JPG A USA MD
மேரிலேண்ட் மாகாணம், National Harbor என்ற இடத்தில் நடைபெற்ற போட்டியில், Kansas மாகாணத்தைச் சேர்ந்த Olathe என்ற இடத்தைச் சேர்ந்த வன்யா ஷிவசங்கர் என்ற மாணவியும், மிசோரி மாகாணம், செஸ்டர் ஃபீல்டைச் சேர்ந்த கோகுல் வெங்கடாச்சலம் என்ற மாணவரும் முதல் பரிசை கூட்டாக வென்றனர். வன்யா ஷிவசங்கரும், கோகுல் வெங்கடாச்சலமும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இதையடுத்து இருவருக்கும் டாலர் மதிப்பில் 37 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். சுமார் ஒரு கோடியே 10 லட்சம் மாணவ-மாணவியர் இந்த ஆண்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் இறுதிச்சுற்றுக்கு 285 பேர் தேர்வாகியிருந்தனர்.

இதில் 14 முறை இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்களே வெற்றி பெற்றும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் இந்த போட்டியில் இரண்டு பேர் பட்டத்தை பகிர்ந்து கொண்டது இதுதான் முதல் முறையாகும் என்பதும் தற்போது பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ள வன்யாவின் சகோதரி காவ்யா கடந்த 2009-ஆம் ஆண்டு இதே பட்டத்தை வென்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

Related Posts

error: Content is protected !!