September 18, 2021

2030–ல் மக்களில் பாதி பேர் உடல் பருமன் நோயால் அவதி!- ஆய்வு அலெர்ட்

உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.அதிகரித்துவரும் இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும் வெற்றிபெறவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது வளர்ந்து கொண்டே சென்றால் 2030–ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் பாதி பேர் உடல் பருமன் நோய்க்கு அவதிப்படுவார்கள் எனவும் உடல் பருமனால் உலக பொருளாதாரத்தில் 1.24 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்றும் மற்றோரு நிறுவனம் நடத்தில் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
health obisity
லண்டனில் உள்ள மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் சமீபத்தில் உடல் பருமன் உள்ளவர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது.அதில் உலக மக்கள் தொகையில் 210 கோடி பேர் அதாவது 30 சதவீதம் மக்கள் உடல் பருமன் மற்றும் அதிக எடையால் அவதிப்படுகிறார்கள் என கூறப்பட்டு உள்ளது.இது பசி பட்டினியால் வாடும் பெரியவர்கள், குழந்தைகள் எண்ணிக்கையை விட 2.15 பங்கு அதிகம் என்று கூறியுள்ளது.

உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity. இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால் நிச்சயம் அனைவரும் சிறுவயது முதல் இளம் வயதினராலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். முப்பது நாட்களில் எடை குறைய எளிய முறை என்ற விளம்பரத்தைப் பார்த்து சிலர் அதை பின்பற்றினாலும் முற்றிறும் எடை குறைய வாய்ப்பில்லை என்று விரக்தி அடைபவர்கள் தான் அதிகம்.

பெரும்பாலும் நமது சூற்றுபுறச்சூழல், பழக்கவழக்கம், பரம்பரை, உடல்வாகு, உல்லாச நட்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மையும் தான். முக்கியமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வாய்க்கு ருசியாக இருந்தால் போதும் குழந்தைகளுக்கு அம்மா வேண்டாம். பாஸ்ட்டா கிண்ணம் காலி. வயதானவர்களுக்கோ கேட்க வேண்டாம் டிவியில் பத்து சீரியலோடு நொறுக்குத் தீனியும் தேவை. நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு, கொழுப்பு பதார்த்தங்கள், சோபா படுக்கை, டிவியே கதி என இருப்பவர்களுக்கு ஏறிய பருமனை குறைக்க யோசிக்க கூட நேரமில்லை.
obesity 1
இதனாலேயே உலக அளவில் நடக்கும் மரண சம்பவங்களில் 5 சதவீதம் உடல் பருமன் நோயால் ஏற்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.இது வளர்ந்து கொண்டே சென்றால் 2030–ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் பாதி பேர் உடல் பருமன் நோய்க்கு அவதிப்படுவார்கள் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.உடல் பருமனால் உலக பொருளாதாரத்தில் 1.24 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது.உடல் பருமனில் இருந்து விடுபட அரசாங்கத்துடன் வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், ஓட்டல் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த நிறுவனம் யோசனை கூறியுள்ளது.