September 24, 2021

ஃபேஸ்புக் நிறுவனர் படித்த ஹார்வேர்ட் யுனிவர்சிட்டியில் 14 சதவீதம் மாணவிகளுக்க்கு பாலியல் வன்முறை!

இன்றைய காலக்கட்டத்தில் சகலரும் பயன்படுத்தும் பேஸ்புக்கானது 2004 ஆம் ஆண்டில், 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், இதற்கான விதை ஊன்றப்பட்டது. பின்னாளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது.
sex survey universiyt
ஆரம்பத்தில் Thefacebook” என மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதனை யாவரும் அணுகி இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர். இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது.

தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னரே ஸக்கர்பெர்க் “thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார்.

இப்படி உலகின் மிகப் பிரபலமான பல்கலைகழகமாக அமெரிக்காவில் உள்ள பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைகழகம் விளங்கி வருகிறது. இதனிடையே ஹார்வேர்டு கிரிம்சன் வகுப்பில் 2015 இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிப்புமிக்க வளாகத்தில் நடைபெறும் பாலியல் நடவடிக்கைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினர். இதில் பல அதிர்ச்சிக்கரமான உண்மைகள் தெரியவந்துள்ளன.

முன்னணியிலுள்ள அந்த பல்கலைக்கழக மாணவர்களும் மற்ற மாணவர்களைபோல பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது பெரிதும் அதிர்வலையை ஏற்பப்டுத்தியுள்ளது..இந்த சர்வே 760 மாணவ மாண்விகளிடம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பாதி மூத்த மாணவர்களிடம் நடத்தப்பட்டது.

அண்மையில் நடந்த ஆய்வின் படி பட்டம் பெற்ற மூத்த மாணவர்கள் நான்கில் ஒருவர் ஹார்வேர்டில் படித்த போது பாலியல் உறவு வைத்து கொள்ள வில்லை என கூறி உள்ளனர். இதை அமெரிக்காவின் அனைத்து செய்தி பத்திரிகைகளும் வெளியிட்டு உள்ளன.வளாகத்தில் அதிகமான மாணவர்கள் பாலியல் மற்றும் காதலால் மெய்மறந்தது போல் தெரியவில்லை.பட்டம் பெற்ற மாணவர்களிடம் காதல் உறவு என்பது சராசரியாகத்தான் இருந்து உள்ளது.

ஆனாலும் 14 சதவீத பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கவலையளிக்க கூடிய தகவலை கூறி உள்ளனர். ஆனால் 7 சதவீதம் பேர் பாலியல் வன்முறை நடப்பதை உறுதிபடுத்தவில்லை. 3 சதவீத ஆண்கள் வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறி உள்ளனர்.

பாலியல் தாக்குதல் : 55 சதவீத ஹார்வர்டு மூத்த மாணவர்கள் 3 ல் 2 பெண்கள், 40 சதவீத ஆண்கள் கல்லூரியில் யார் யாரையோ பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியது தெரியும் என தெரிவித்து உள்ளனர்.

மன அழுத்தம் : 20 சதவீத மூத்த மாணவர்கள் மன அழுதத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 16 சதவீதம் பேர் பதட்டத்திற்கு

ஓரின சேர்க்கையாளர்கள்: 13 சதவீதம் பேர் தம்மை தாமே ஓரின சேர்க்கை அல்லது இரு பாலுணர்வும் உள்ளவராக அடையாளம் காட்டி உள்ளனர்.

58 சதவீத மூத்தவர்கள் தாங்கள் கன்னித்தன்மையுடன் ஹார்வேர்டில் நுழைந்ததாகவும். 24 சதவீதம் பேர் ஹார்வேர்டில் உறவு வைத்து கொள்ளவில்லை எனவும் கூறினர்.

20 சதவீதம் பட்டம் பெற்றவர்கள் தாங்கள் ஏமாற்றபட்டதாக கூறியுள்ளனர்.