2022ம் ஆண்டுகான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

2022ம் ஆண்டுகான மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

ண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுகான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்து போன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மனிதன் எங்கிருந்து வந்தான்? நமக்கு முன்னால் தோன்றிய மனிதனுக்கும் தற்போது பரிணாம மாற்றம் அடைந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கோணத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார் ஸ்வாண்டே பாபோ.

ஹோமினின் என்று அழைக்கப்படும் அழிந்து போன முந்தைய காலத்து மனித இனத்தைப் பற்றி சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புடைய நியாண்டர்தால் (Neanderthal) என்ற அழிந்துபோன இனத்தின் மரபணுவை இவர் வரிசைப்படுத்தியுள்ளார்.

மேலும் டெனிசோவா என்ற ஹோமினின்கள் பற்றி உலகிற்குக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சியில் முக்கியமாக மனித கண்டுபிடிப்பில் பெரிய அச்சாணியாகத் திகழக் கூடிய மரபணு பரிமாற்றத்தைப் பற்றிக் கண்டுபிடித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!