October 19, 2021

2014-ம் ஆண்டிற்கான குழந்தைகளுக்கான அமைதி பரிசு பெற்ற இந்திய வம்சாவளி மாணவி!

இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் நேஹா குப்தாவிற்க்கு (வயது 18) இந்த ஆண்டிற்கான குழந்தைகள் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த குழந்தைகள் நல அமைப்பு ஒன்று உலக அளவில் குழந்தைகள் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆண்டு தோறும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கி வருகிறது.
Netherlands Children's Peace Prize-
இந்த ஆண்டு இந்த விருதுக்காக அமெரிக்காவில்வாழ்து வரும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த நேகா குபதா தேர்வு செய்யபட்டு உள்ளார். 18 வயதாகும் நேகா சொந்தமாக ஒரு அறக்கட்டளை அமைத்து குழந்தைகள் நலனுக்காக சேவை செய்து வருகிறார்.நேஹா தனது 9ஆம் வயதில் இந்தியாவுக்கு தனது பெற்றோருடன் வந்திருந்தார். இங்கு ஆதரவற்ற குழந்தைகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அப்போதே குழந்தைகளுக்கான தனது சேவையை தொடங்கினார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், அங்கிருந்த தனது பொம்மைகளை விற்று பணம் திரட்ட முடிவெடுத்தார். அதன்படி அவர் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதன்மூலம் 700 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.43,000) பணம் திரட்டினார். அதைத்தொடர்ந்து அவர் கைவினைப் பொருள்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து பணத்தை திரட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வந்தார்

இப்படி சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு தற்போது கல்லூரி மாணவியாக திகழும் நேகா, ஆதரவற்றோர்களுக்கென “எம்பவர் ஆர்ஃபன்ஸ்’ என்ற பெயரிலான அறக்கட்டளை ஒன்றினை நடத்தி வருகிறார். இதன்மூலம் இதுவரை ரூ. 8 கோடி திரட்டி உதவி புரிந்துள்ளார். .இதே போல் ரஷ்யாவை சேர்ந்த அலாக்ஸி, கானாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்ற சிறுமிகளும் இந்த விருதை பெறுகின்றனர். கடந்த ஆண்டு குழந்தைகளுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலாவிற்க்கு வழங்கபட்டது.இவர் தற்போது உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.