2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் தொடர்ந்து சரிவு: இதன் பின்னணி என்ன?

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கம் தொடர்ந்து சரிவு: இதன் பின்னணி என்ன?

ந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்து, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். அப்போது உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்த நிலையில், ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு பதுக்குவதற்கு வசதியாகப்போய்விடும் என கூறி அப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கின. ஆனால் இப்போது 2 ஆயிரம் நோட்டு ரூபாய் புழக்கத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிற அளவுக்கு இந்த நோட்டுகள் மறைந்து விட்டன.

இதன் உண்மை நிலைமைதான் என்ன என்பது பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையும், 2 ஆயிரம் நோட்டு நோட்டுகள் எண்ணிக்கை 2020, 2021, 2022 என தொடர்ந்து ஆண்டு தோறும் சரிவை சந்தித்து வருவதை காட்டுகின்றன. அது வருமாறு:-

* மார்ச் 2020 நிலவரப்படி நாட்டில் 274 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் 2.4 சதவீதம் ஆகும்.

* 2021ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் நோட்டுகள் எண்ணிக்கை, அதிரடியாக 245 கோடி எண்ணிக்கையாக குறைந்தது. இது மொத்த புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 2 சதவீதமாக சரிந்தது.

* 2022 மார்ச் மாத இறுதியில் நாட்டில் புழக்கத்தில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 214 கோடியாக இருந்தது. இது புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 1.6 சதவீதம் ஆகும்.

* மதிப்பு அடிப்படையில் பார்த்தால், 2020 மார்ச் இறுதியில் புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு 22.6 சதவீதம் ஆகும். 2021 மார்ச்சில் இது 17.3 சதவீதமாக சரிந்தது. கடந்த மார்ச் இறுதியில் இது மேலும் வீழ்ச்சியை சந்தித்து 13.8 சதவீதம் ஆனது.

பின்னணி என்ன?

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதின் பின்னணிதான் என்ன என்ற கேள்வி எழுகிறது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தள்ளதாக ஏற்கனவே 2019 தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

2020-ம் ஆண்டில் ஏ.டி.எம். மையங்களில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நீக்குமாறு பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஒரு பக்கம் அச்சிடுவது நிறுத்தம், மற்றொரு பக்கம் கிழிந்த சேதம் அடைந்த நோட்டுகளின் புழக்கம் நிறுத்தம், ஏ.டி.எம். மையங்களில் வினியோகம் நிறுத்தம் ஆகியவற்றுடன் பதுக்கலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்து வருவதற்கு காரணங்கள் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!