2 ஜி சாதிக்பாட்சா சூசைட் பண்ணலை! – கொலை செஞ்சோமாக்கும்! –

2 ஜி சாதிக்பாட்சா சூசைட் பண்ணலை! – கொலை செஞ்சோமாக்கும்! –

மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் தொழில் பங்குதாரர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் எனக்கும் பங்குள்ளது என திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் தெரிவித்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் திருச்சியில் அளித்த பேட்டி குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீஸார் வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

2 g may 18

அப்போது அவர் ம் “2011 மார்ச் 16-ம் தேதி ஆ. ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமாரின் அலுவலகத்துக்கு சாதிக்பாட்சா வரவழைக்கப்பட்டார். விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆத்திரத்தில் இருந்த ஐ.ஜி. ஜாபர்சேட் திடீரென சாதிக்பாட்சாவின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினார். நான் சாதிக்பாட்சாவின் கால்களைப் பிடித்துக்கொண்டேன். அவர் இறந்தவுடன் அவரது வீட்டுக்கு சென்று சாதிக்பாட்சாவை தூக்கில் மாட்டிவிட்டு வந்தோம். இந்த சம்பவத்தில் ரூ. 1 கோடி பேரம் பேசப்பட்டது. அந்த தொகை எனக்கு வந்து சேரவில்லை” என்றார். இதையடுத்து, அவரிடம் உளவுத்துறை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..

அது சரி யார் அந்த சாதிக் பாட்ஷா? என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் பிளாஷ் பேக்:

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த சாதிக் பாட்சா (வயது 37), கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.
ஸ்பெக்டரம் வழக்கில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள சாதிக் பாட்சாவின் வீடுகள் மற்றும் அலுவலங்களில் கடந்த டிசம்பர் மாதம் சி.பி.ஐ சோதனை நடத்தியது.

அப்போது ஸ்பெக்டரம் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யும் பணியில் சி.பி.ஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த டெல்லி வருமாறு சிபிஐ அவரை அழைத்ததாக தெரிகிறது.இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா இன்று தூக்கில் தொங்கினார்’

சாதிக் பாட்சாவின் வளர்ச்சி பின்னனி:

ஆ.ராசாவின் ஆரம்ப காலத்து நண்பர் சாதிக் பாட்சா. 1996-ல் ஆ.ராசா அரசியலுக்குள் நுழைந்து எம்.பி-யான ஆண்டு முதல் நெருக்கமாக இருந்தவர்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, சாதிக் பாட்சாவின் சொந்த ஊர். உடன் பிறந்த சகோதரர்கள் மூவர். அண்ணன், பள்ளப்பட்டியிலேயே இருக்க… தம்பிகள் ஜமால் முகமது, ஜாஃபர் அலி இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டனர்.
20 வருடங்களுக்கு முன்னர் பிழைப்புத் தேடி பெரம்பலூருக்கு வந்த சாதிக், ஆரம்பத்தில் பாய்களைத் தலையில் சுமந்து விற்று வந்தாராம். அடுத்து, கரூர் ஜவுளிகளைக் கொண்டுவந்து வீடு வீடாகக் காலையில் போகும்போது தந்துவிட்டு, மாலை திரும்பும்போது வசூல் செய்வாராம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையிலும் இறங்கினார். பிறகு சைக்கிளில் வியாபாரம் பார்க்கும் அளவு முன்னேறினார்.

இந்த நிலையில், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த முனவர் பாய் என்ற டெய்லரின் நட்பு கிடைத்தது. வியாபாரத்துக்குப் போகும் இடங்களில் ஏதேனும் நிலம் இருந்தால், அதுபற்றிய தகவல்களைச் சொல்லி, புரோக்கராகவும் ஆனார். நிலம் வாங்கி விற்பதில், பெரும் லாபம் கிடைக்கும் என்கிற தொழில் சூட்சுமத்தைக் கற்றவர்,கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தவர்… வேறு தொழிலிலும் ஈடுபட விரும்பி, கடன் வாங்கி, போர் போடுவதற்கான டிரில்லர் இயந்திரம் வரவழைத்தார். இதில் சொற்ப வருமானமே கிடைக்க… கடன்காரர்கள் நெருக்கினர். அந்த நிலையில்தான், அப்போது வழக்கறிஞரான ஆ.ராசாவின் துணையை அவர் நாடினார்.

அதன் பின்னர், 96-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ஆ.ராசா எம்.பி. ஆனார். சாதிக் பாட்சாவும் தனது ரியல் எஸ்டேட் பிசினஸை விரிவுபடுத்தினார்.பி.ஜே.பி. அரசு 13 மாதங்களில் கவிழ, பதவி இழந்தார் ஆ.ராசா. இந்த நிலையில், உள்ளூரில் உள்ள வேறு சில தி.மு.க. பெருந்தலைகள் உதவியுடன் தொழிலை வளப்படுத்தினார் சாதிக். மீண்டும் 99-ம் ஆண்டு ஆ.ராசா தேர்தலில் போட்டியிட்டு, மத்திய அமைச்சராக… ‘கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்’ நிறுவனமும் உதயமானது. இதில், ஆரம்பத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி பங்கு பெற்றிருந்து, பிறகு விலகிக்கொள்ள… ஆ.ராசாவின் அக்கா மகன் பரமேஸ்குமார் முக்கியப் பொறுப்பு ஏற்றார். பிறகு கட்டடங்களையும் கட்டித்தர ஆரம்பித்தனர். இவ்வாறாக தொழில் ரீதியில் சாதிக் பாட்சா வளர்ச்சி அடைந்தார்.

* 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்திய போது, சாதிக் பாட்சாவின் சென்னை அலுவலகங் களும், வீடுகளும் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் சோதனையிடப்பட்டன.கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்ற முறையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் பெறப்பட்ட பணத்தைக் கொண்டே கிரீன்ஹவுஸ் நிறுவனத்தை வளப்படுத்தியிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சாதிக்கிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.குறிப்பாக, ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் எப்படி 600 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்ட முடிந்தது என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!