1980-க்கே நம்மை அழைத்துச் செல்லும் ”போர்க்குதிரை” – ஆல்பம்

1980-க்கே  நம்மை அழைத்துச் செல்லும் ”போர்க்குதிரை” – ஆல்பம்

சுப்பிரமணியபுரம்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அமரகாவியம்’ போன்ற பீரீயட் திரைப்பட வரிசையில் 1980-களை கதை காலமாக்கி து எடுக்கப்பட்ட படம்தான் ‘போர்க்குதிரை’..!1980-ல் உசிலம்பட்டியில் நடக்கும் கதைதான் இந்தப் படத்தின் களம். ஒரு அப்பாவி இளைஞனுக்கும் அராஜகக்காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே கதையாம். படம் பற்றி இயக்குநர் ஸ்ரீஇபிரவீனிடம் கேட்ட போது,”1980-ல் காதல் எந்தளவுக்கு உன்னதமாக இருந்தது..? மற்றும் குடும்பங்களில் அண்ணன், தங்கை, அம்மா, அப்பா பாசம், எந்தளவுக்கு இணக்கமாக இருந்தது என்பது பற்றியுமான கதை இது. நாம் சில சமயங்களில் ஏதாவது ஒரு ஊருக்கு செல்லும்போது அங்கு நமக்கு நல்ல அனுபவமோ, கெட்ட அனுபவமோ கிடைக்கக் கூடும்..அது போல கதாநாயகன் காளி உசிலம்பட்டிக்கு செல்லும்போது அவன் அதுவரையில் சந்தித்திராத ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கிறது..! அதை அவன் எவ்வாறு போர்க்குணம் கொண்டு சந்திக்கிறான் என்பதை ஓர் அழகான காதல், நட்பு, குடும்ப பாசம், யதார்த்தமான, வியக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் கலந்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.” என்றார்

error: Content is protected !!