15 நிமிடங்களில் முடிந்தது ரயில்வே பட்ஜெட் உரை!

15 நிமிடங்களில் முடிந்தது ரயில்வே பட்ஜெட் உரை!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, நண்பகல் 12.10 மணி அளவில் ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று மக்களவையில் தாக்கல் செய்து, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.தெலங்கானா பிரச்னை காரணமாக ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே சுமார் 15 நிமிடங்களிலேயே மல்லிகார்ஜூன கார்கே தனது பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார்.
indian-railway feb 12
பாராளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ரெயில்வே மந்திரி கார்கே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தேச ஒருமைபாட்டுக்கு ரெயில்வே முக்கிய பங்கு அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் எஞ்ஜினாக ரெயிவே செயல்படுகிறது என்று கூறினார்.2758 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிர்ணையிக்கப்பட்டதை விட 258 கிலோ மீட்டர்கள் அதிகமாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்வே துறையை விரிவு படுத்த வேண்டியது அவசர தேவை. காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் ரெயில் பாதை மூலம் நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்படும். ஜம்முவில் உள்ள கட்ரா நகருக்கு விரைவில் ரெயில் பாதை அமைக்கப்படும். 72 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ரெயில்வே பாதை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ரெயில்வே சேவையை மேம்படுத்த கூடுதல் நிதி தேவை படுகிறது. மேகலாயா- அருணாச்சல பிரதேசம் இடையே ரெயில் பாதை அமைக்கப்படும் என்று கடும் அமளிக்கு இடையே கார்க்கே பட்ஜெட்டை வாசித்தார். பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை.
* 17 கூடுதல் கட்டணம் கொண்ட பிரிமியம் ரயில், 38 புதிய விரைவு ரயில்கள் விடப்படும்.

* 2014-15ல் பயணிகள் பிரிவில் ரூ.45,300 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு.

* 2014-51ல் சரக்கு போக்குவரத்து பிரிவில் ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு.
* கூடுதலாக அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.

* சரக்கு ரயில்களுக்கான தனி பாதைகள் மூலம் செலவுகள் குறைந்துள்ளன.

* அதிவேக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டியது அவசியம்.

* மேகாலாயா- அருணாச்சல்பிரதேசத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.

* கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு அவசியம்.

* 6வது ஊதியக்குழுவின் பரிந்துரை நிறைவேற்றப்பட்டுள்ளன.

* 4,556 கி.மீ. நீளமுள்ள இருப்புப்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

* நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 56 கி.மீ பாதை அதிகமாக மின்மயமாக்கம்.

* அடுத்த 4 மாதங்களுக்கான ரயில்வே செலவினங்களுக்கு ஒப்புதல்.

* காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை
* ஜம்மு காஷ்மீரில் 11.2 கி.மீ. தூரத்திற்கு குகை பாதை

* ரயில்வேயை மேம்படுத்த உடனடியாக புதிய முதலீடுகள் தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Kharge presents interim railway budget amid chaos, House adjourned till tomorrow
***************************************************************************************************
Parliament was disrupted again on Wednesday over a variety of issues, including Telangana, leading delayed the Interim Railway Budget 2014-15 to be presented in the Parliament today.

Related Posts

error: Content is protected !!