11 வயசிலே 3 டிகிரி வாங்கிய இந்திய சிறுவன்!

11 வயசிலே 3 டிகிரி வாங்கிய இந்திய சிறுவன்!

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில், சாக்ரமென்டோ என்ற இடத்தில் வசித்து வருபவர் பிஜோ ஆபிரகாம். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி டாக்டர் தாஜி ஆபிரகாம். கால்நடை மருத்துவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தம்பதியரின் 11 வயது மகன் தானிஷ்க் ஆபிரகாம்.இவன் அங்குள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் படித்து வந்தான். இப்போது அவன் பட்டம் பெற்று விட்டான். அதுவும், கணிதம், அறிவியல், வெளிநாட்டு மொழி கல்வி என 3 இணை பட்டங்கள் பெற்று அசத்தி உள்ளான்.
usa degree boy
அந்த கல்லூரியில் மிகக் குறைந்த வயதில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான். இதை அந்த கல்லூரியின் செய்தி தொடர்பாளர் ஸ்காட் குரோ உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு, இவன் உயர்நிலைப்பள்ளி டிப்ளமோ பெற்றுள்ளான். அப்போது இவனது சாதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை கவர்ந்தது. அவர் தானிஷ்க் ஆபிரகாமுக்கு கடிதம் எழுதி பாராட்டினார்.

4 வயதாக இருந்தபோதே இவன் மென்சா என்று அங்கு அழைக்கப்படுகிற அறிவுத்திறன் சங்கத்தில் சேர்ந்தான்.
இப்போது பட்டம் பெற்றிருப்பது குறித்து டி.வி. ஒன்றில் பேட்டி அளித்த இந்த மழலை மேதை, ‘‘கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய விஷயம் இல்லை’’ என்றான்.

கல்லூரி நினைவுகள் குறித்து அவன் கூறும்போது, ‘‘கல்லூரியில் சில மாணவர்கள் எனக்கு மிரட்டல் விடுத்தனர். பெரும்பாலானவர்கள், தங்கள் வகுப்பில் ஒரு சிறுவன் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்’’ என்றான்.

எதிர்கால திட்டம் பற்றி அவன் குறிப்பிடுகையில், ‘‘நான் ஒரு டாக்டர் ஆக விரும்புகிறேன். மேலும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் விளங்க விரும்புகிறேன். அது மட்டுமல்ல, அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியையும் எட்டிப்பிடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று கூறினான்.

இவனது தங்கை தியாரா ஆபிரகாமும் ஒரு மழலை மேதை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!