March 26, 2023

இன்னிய பிப்ரவரி 10: டெடி டே!-

மதர் டே.. ஃபாதர் டே உள்ளிட்ட ஒரிஜினல் பாசக்கார உறவுகளுக்கெல்லாம் ஜஸ்ட் ஒரே  ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமே நடக்கிறது. ஆனால் இந்த வியாபாரமயமாகி விட்ட உலகில் காதலர்களை கவரும் விதத்தில் காதலர் தினம் – காதலர் வாரமாகவே கொண்டாடப்படுது.. அந்த வகையில் இன்னிய பிப்ரவரி 10: டெடி டே –

பெண்களுக்கு டெடி பியர் பிடிக்கும் என்பதால் தன் அன்புக் காதலிக்கு அழகிய பெரிய காதல் சின்னம் பதித்த டெடி பியர் பொம்மையை வழங்கி மகிழ வைக்கும் நாளாம்.

டெடி பியர் எனப்படும் கரடி பொம்மைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலருக்கும் எப்போதும் ஓர் அலாதிப் பிரியம் உண்டு. அதிலும், குறிப்பாகப் பெண்களுக்கு டெடி பியர் என்றால் உயிர். யாருமின்றித் தனியாக இருக்கும் சூழல்களில் பாதுகாப்பான ஜீவனாகக் கரடி பொம்மையைக் கட்டியணைத்துக்கொள்வார்கள். அப்படி, எல்லா வீடுகளிலும் அன்பாக ‘வளர்க்கப் படும்’ ஒரு உயிரினமாகவே ஆகிவிட்ட டெடிபியர் உருவான கதை தெரியுமோ?

இந்த டெடி பியர் முதன்முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகம் ஆனது. அதெப்படின்னா அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் வேட்டையாடுவதில் ரொம்ப இண்ட்ரஸ்ட் உள்ளவர்.

அவர் ஒரு தடவை வேட்டைக்கு போன இடத்துலே காயத்துடன் உலாவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவங்க கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதைச் சுடாமல் ‘பொழைச்சுப்போ’னு விட்டுவிட்டார். இந்தச் செய்தி பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் வெளியாகிப் பரவி புடுச்சு.

இதே தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு ‘டெடி’ என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் மீடியாக்காரய்ங்க கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ‘டெடி பியர்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர்.

இதை வைத்து கணக்கு போட்டு அடடே இதுலே கல்லா கட்டலாம் என நினைத்த பொம்மை நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த கரடி பொம்மைகளுக்கு ‘டெடி பியர்’ எனப் பெயர் சூட்டிச்சு..