கொரோனாவால் பெற்றோரை இழந்து 1.47 லட்சம் குழந்தைகள் தவிப்பு!

கொரோனாவால் பெற்றோரை இழந்து 1.47 லட்சம் குழந்தைகள் தவிப்பு!

ந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 1 லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய்க் காலத்தில் பெற்றோரை இழந்ததால் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.) சுப்ரீம் கோர்ட்டில் தானாக முன் வந்து அறிக்கை அளித்தது.

பால் சுவராஜ் போர்ட்டல் என்ற தளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான அந்த அறிக்கையில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள்:-

* 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி 11ந் தேதி வரை செய்த பதிவேற்றப்படி, 1 லட்சத்து 47 ஆயிரத்து 492 குழந்தைகள் தங்களது தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் இழந்து தவிக்கின்றனர்.

* இவர்களில் 76 ஆயிரத்து 508 பேர் ஆண் பிள்ளைகள், 70 ஆயிரத்து 980 பேர் பெண் பிள்ளைகள், 4 பேர் திருநங்கைகள் ஆவர்.

* பெரும்பாலான குழந்தைகள் 8 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் எண்ணிக்கை 59 ஆயிரத்து 10 ஆகும். அடுத்து 14–15 வயதினர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 763 ஆக உள்ளது. 16–18 வயதினர் 22 ஆயிரத்து 626 பேர். 4–7 வயதினர் 26 ஆயிரத்து 80 பேர்.

* 1 லட்சத்து 25 ஆயிரத்து 205 பேர் ஒற்றை பெற்றோரைக் கொண்ட குழந்தைகள். 11 ஆயிரத்து 272 பேர் குடும்ப உறுப்பினர் பாதுகாப்பில் உள்ளனர். 8,450 பேர் பாதுகாவலர்களின் பாதுகாப்பில் உள்ளனர்.

தங்கள் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரை மாநில வாரியாக இழந்த குழந்தைகள் எண்ணிக்கை வருமாறு:-

ஒடிசா (24,405), மராட்டியம் (19,623), குஜராத் (14,770), தமிழ்நாடு (11,014), உத்தரபிரதேசம் (9,247), ஆந்திரா (8,760), மத்திய பிரதேசம் (7,340), மேற்கு வங்காளம் (6,835), டெல்லி (6,629), ராஜஸ்தான் (6,827).

குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!