நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு முறையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர 10 சதவீத இடங்களை ஒதுக்க தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற உள்ளது. வரும் திங்கள் கிழமை அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அவசரச் சட்டத்துக்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர்களை தேர்வு செய்ய நீட் தேர்வு முறை அமலுக்கு வந்தது. தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்படுவது குறைந்துகொண்டே வந்தது. இந்த விவரத்தை தமிழக அரசு அங்கீகாரம் செய்தது.
இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை வழங்குவதற்காக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அமைத்தார்.
நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தனது அறிக்கையை தமிழக அரசுக்கு சென்ற வாரம் தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டில் உள்ள தொழிற் கல்லூரிகளில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவது என்று தமிழ்நாடு அரசு 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசின் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பின்னர் ரத்து செய்தது.
ஆனால் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மொத்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை அன்றைய திமுக அரசு நிறைவேற்றியது. அத்துடன் செட்யூல்டு வகுப்பினருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3.5 சதவீதத்தை அருந்ததியர் வகுப்புக்கு ஒதுக்கவும் அந்த சட்டத்தில் வரையறை செய்யப்பட்டது. சட்டமாக ஏற்கப்பட்ட காரணத்தினால் அந்த இடம் ஒதுக்கி விட்டதால் ரத்து செய்ய வகைக் இல்லாமல் போயிற்று.
அதுபோல ஒட்டுமொத்த மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டத்தை இயற்ற அதிமுக அரசு தீர்மானித்துள்ளது.
முதல் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், கார்ப்பரேஷன் பள்ளிகள், முனிசிபல் பள்ளிகள், கள்ளர் சீர்திருத்த பள்ளிகள், வன இலாகா நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தை நீட் தேர்விலும் ஒதுக்கீடு செய்ய அவசர சட்டம் பிறப்பிக்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்க நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை நீதிமன்றங்கள் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது அதற்கு முன்னோடியாக இப்பொழுது அவசரச் சட்டம் பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கள் (15-6-2020)அன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் பொழுது அவசரச் சட்டம் தொடர்பான தீர்மானத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் எனத் தெரிகிறது.